உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 4 விமானப்படை வீரர்கள் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 4 விமானப்படை வீரர்கள் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்தி தாக்குதலில் விமானப்படை வீரர்கள் நான்கு பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இன்று விமானப்படை வீரர்கள் சிலர் வாகனத்தில் வழக்கமாக செல்லும் கான்வாய் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்த காஷ்மீர் ராஷ்ட்ரீய ரைபில்ஸ் படை வீரர்கள் அங்கு பாதுகாப்புபணியில் ஈடுபட்டு பயங்கரவாதிகளை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்த விமானப்படை வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 04, 2024 20:52

இதுபோன்ற தாக்குதல்கள் நமது நாட்டில் உள்ள பல தேசதுரோக அரசியல்வாதிகள் ஆதரவு இல்லாமல் நடக்கவே வாய்ப்பில்லை ஆகையால் நாம் முதலில் அப்படிப்பட்ட தேசதுரோகிகளை பிடித்து சிறையில் ஆயுள் முழுக்க அடைக்கவேண்டும் இல்லை ஓடவிட்டு என்கவுண்டர் செய்யவேண்டும் பிறகு பாருங்கள் ஒரு தாக்குதல் கூட இருக்காது


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி