உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜெயில் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்.,22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறால் இருக்க பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறைகளில் முக்கிய தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளும், ஸ்லீப்பர் செல் உறுப்பினர்களும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஸ்ரீநகர் மத்திய சிறை, ஜம்முவில் உள்ள கோட் பால்வால் சிறையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venkatan
மே 05, 2025 14:27

நாட்டில் சுமார் 30 கோடி இளைஞர்களுக்கு 6 மாத காலத்திற்கு நவீன ஏ ஐ தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன போர் உத்தி பயிற்சி, சொந்த விருப்பத்தின் பேரில் அளிக்கலாம். உணவு உடை சம்பளம் சலுகை அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும். ஆள் சேர்ப்பின்போதும் முன்னுரிமை வழங்கவேண்டும். இது அவசரம் காலங்களில் உதவும். எதிரிகளுக்கும் இறுமாப்பு வரும்.


வேணு
மே 05, 2025 11:26

பிரித்து அனுப்புங்கள். UP Mp மற்றும் பீஹாருக்கு அனுப்புங்கள்


Nellai tamilan
மே 05, 2025 11:25

இவர்களை அடைத்து வைத்து பாதுகாப்பதற்கு பதிலாக சோலியை முடித்து பரலோகம் அனுப்பி வைத்தால் நமக்கும் தலைவலி இல்லாமல் இருக்கும். அவர்களும் 72 சுவனகன்னிகளுடன் சந்தோஷமாக இருப்பார்கள்.


Manimaran Krishnan
மே 05, 2025 10:54

சிறந்த ஐடியா.


ராமகிருஷ்ணன்
மே 05, 2025 10:46

காஷ்மீர் ஜெயிலில் உள்ள பயங்கரவாதிகளை சென்னை சிறையில் அடைத்தால் சுக போக வாழ்வு வாழ விடியல் அரசு துணை நிற்கும். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலையும் செய்து விடுவார்கள். பிறகென்ன சென்னைக்குள் குண்டுகளை வீசி திரியலாம்.


VSMani
மே 05, 2025 10:32

முக்கிய தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளை, ஸ்லீப்பர் செல் உறுப்பினர்களை கர்நாடகா ஆந்திரா சிறைகளில் அடைத்து வைக்கலாமோ ?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 05, 2025 10:59

அந்தமான் சிறையில் வைப்பது தான் பாதுகாப்பானது.....வெளியே தப்பிச் செல்லவோ அல்லது வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி நான்கு புறமும் கடல் நீரால் சூழப்பட்டுள்ள தீவு....அவர்களை மாற்றுவது ராணுவ ரகசியமாக வைத்திருக்க வேண்டும்..... தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நேரடியாக ஆஜாராவதற்கு பதில் காணொளி மூலம் ஆஜர் படுத்தலாம்.....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை