உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நியூசி.,க்கு எதிரான டெஸ்ட்: 46 ரன்னுக்கு சுருண்டது இந்திய அணி: 5 பேர் டக்

நியூசி.,க்கு எதிரான டெஸ்ட்: 46 ரன்னுக்கு சுருண்டது இந்திய அணி: 5 பேர் டக்

பெங்களூரு: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. விராட் கோலி, சர்பராஸ் கான், ராகுல், ஜடேஜா, அஷ்வின் ஆகிய 5 வீரர்கள் 'டக்' ஆகி வெளியேறினர்.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (அக்.,16) துவங்க இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், 'டாஸ்' போடாமலேயே முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 2ம் நாளான இன்று, 'டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kphlyqn9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுப்மன் கில் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் சர்பராஸ் கான் இடம்பெற்றார். அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, 2 ரன்னில் டிம் சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 'டக்' அவுட் ஆகி வெளியேறினார். சர்பராஸ் கானும் 'டக்' அவுட்டானார். இதனால் வெறும் 10 ரன்னில் 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது.

அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிதுநேரம் தடைப்பட்டது. மீண்டும் தொடர்ந்த ஆட்டத்தில் இந்திய அணியால் மீண்டு வர முடியாத அளவிற்கு அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 ரன்னில் கேட்சானார். பின்னர் வந்த ராகுல், ஜடேஜா, அஷ்வின் ஆகியோரும் 'டக்' அவுட் ஆகினர். ஓரளவு தாக்குப்பிடித்த ரிஷப் பண்ட் 20 ரன்னில் வெளியேற, பும்ரா (1), குல்தீப் யாதவ் (2) அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதனால் இந்திய அணி 46 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இந்திய அணியின் 5 முக்கிய வீரர்கள் 'டக்' அவுட் ஆனதால், ரன் சேர்க்க முடியாமல் சுருண்டது. சொந்த மண்ணில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் என்ற மோசமான சாதனையாக இது பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kulandai kannan
அக் 17, 2024 19:23

திமுகவினருக்கு அறிவோடு பேசுவது கிஞ்சித்தும் கிடையாது.


vijai
அக் 17, 2024 18:24

அதிர்ஷ்ட விளையாட்டு


sundarsvpr
அக் 17, 2024 15:25

விளையாட்டில் விதி விளையாடுகிறது. அவ்வளுவுதான்.பூஜ்யம் எடுத்தவன் நூறும் எடுப்பான். இந்த இரண்டு சாதனையும் நிர்ணயிப்பது யார்? புரியாத புதிர். நம் கடன் பணி செய்வதே.


R.Natatarajan
அக் 17, 2024 14:57

பணத்துக்காக ஆடுகிறார்கள். இதே ஐபிஎல் என்றால் வேறுமாதிரி ஆடுவார்கள். அனைவருக்கும் இந்த டெஸ்ட்க்கான ஊதியத்தை நிறுத்த வேண்டும்


Ms Mahadevan Mahadevan
அக் 17, 2024 13:42

கன்று குட்டிகளிடம் இந்தியா வென்று விடும் முரட்டு காலைகளிடம் தொற்று விடும்


Rajathi Rajan
அக் 17, 2024 13:26

எங்க போனார் நமது எதுகை மோனை?? வழக்கம் போல் "நியூசி டாப் இந்தியா டக்"னு எதுகை மோனை ..போட வேண்டியது தானே???


karutthu kandhasamy
அக் 17, 2024 12:49

கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் தான் ஆனால் இவ்வளவு கேவலமாக ஆடக்கூடாது .வெற்றி பெற்றால் எப்படி பணத்தை அள்ளிக்கொடுக்கிறார்க்ளோ அந்தமாதிரி கேவலமாக ஆடினால் அபராதம் விதித்து பணத்தை திரும்பி வாங்க வேண்டும்


Kumar Kumzi
அக் 17, 2024 12:49

கோழி முட்டையிடுவதில் ஆச்சரியம் என்ன இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை