உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

தரம் கெட்ட வேலை!ரா.பேட்டையில் ஏழைகளுக்கு அரசு கட்டித் தந்த வீடுகள், தரம் இல்லாததால் இடிந்து விழும் அபாயம். இந்த வேலைக்கு 60 சதவீத கமிஷன் போனதோ, என்னவோ. இதனை ரிப்பேர் செய்து தருவதாக கூறி, ஒரு ஆண்டுக்கு முன்னாடி சில ஆபீசர்கள் வந்தாங்க; பார்த்தாங்க. அத்தோடு அவர்கள் வேலை முடிஞ்சதா மவுனமாகிட்டாங்க.இங்குள்ள 140 வீடுகளுமே பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு வயசான பெண் தலைமீது காரை விழுந்து 15 தையல் போட நேர்ந்தது. இன்னும் எத்தனைப் பேரை காவுக்கொள்ள போகுதோ.ஆபத்து நேரத்தில், ஆம்புலன்ஸ் வசதிக்கூட செய்து தர அங்கு மக்கள் பிரதிநிதிகள் யாரும் முன் வரலயேன்னு அவங்க கோபத்தை காட்டுறாங்க. ஓட்டுக்கு வரத்தானே போறாங்க. அப்போ பாத்துக்கலாம்னு 'காரமா' பேசுறாங்க.ஸ்கூட்டர் வாங்க சம்திங்?முனிசி.,யில் மாற்று திறனாளிகள் 52 பேருக்கு, கலெக்டர் உத்தரவில் இலவசமாக மின்சார ஸ்கூட்டர் கொடுத்தாங்க. இதனை எப்படி, யார், தேர்வு செய்தது என தெரியவில்லை. வார்டு கவுன்சிலர்களுக்கு முன்னுரிமை இல்லையாம். ஸ்கூட்டர் கிடைக்க லஞ்சம் தாண்டவம் ஆடினதா வட்டார தகவல்கள் கசிந்திருக்குது. முனிசி., யில் வழங்குகிற பொருட்கள் இலவசமாக இருந்தால் சிலருக்கு கொண்டாட்டம் தான். கவுன்சில் தீர்மானம் இல்லாமல் அதிகாரிகளின் தர்பாரில் தான் முறைகேடு நடக்குதாம். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த ஆட்டமோ. முடங்கிய வாகனங்கள்!குப்பையை எடுத்துச் செல்ல முனிசி.,யில் கோடியில் செலவிட்டு 35 வார்டுகளுக்கும் தலா ஒரு வாகனம் வாங்கினாங்க. இது போதாதென லாரி டிராக்டர், ஜேசிபி வாகனம் எல்லாம் கூட இருக்குது. இவைகள் எல்லாம், ஒரு ஆண்டு வரை ஒவ்வொரு வார்டிலும் குடியிருப்பு பகுதியில் வந்தது. முனிசி., தலைவர், துணைத் தலைவர் இல்லாததால், உறுப்பினர்கள் செயலில் தொய்வு ஏற்பட்டிருக்குது.இதனாலே 50 சதவீத குப்பையை அள்ளி செல்கிற வாகனங்கள இயங்காமல் சும்மா வெட்டியா கிடக்குது. இதனாலே கண்ட இடத்தில் குப்பையை கொட்டுறாங்க. ஓடாத வாகனங்களுக்கு எரிப் பொருள் செலவு கூடுதா குறைந்த தான்னு மாவட்ட நிர்வாகம் கணக்கு பார்க்க வருவாங்களா. இதுபற்றியும் சமூக ஆர்வலர்கள் லோக் ஆயுக்தாவுக்கு புகார் செஞ்சிருக்காங்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை