உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் செக்போஸ்ட்-!

தங்கவயல் செக்போஸ்ட்-!

அரசியல் ஆதாய அவதுாறு!ஏ.பி.எம்.சி., விளைபொருள் விற்பனை சந்தை குழுவுக்கு, 25 ஏக்கர் நிலத்தை அரசு தான் ஒதுக்கியது. இந்த இடத்தை சுத்தப்படுத்த, சமப்படுத்த, வேலைகள் நடக்குது. ஆனால், முறைகேடாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்துவதாக எதிர்ப்பு காட்டுறாங்க.அரசு ஒதுக்கிய இடத்தில் கற்கள் இருந்தாலோ, மண் இருந்தாலோ அது ஏ.பி.எம்.சி.,க்கு தானே உட்பட்டது. அனுமதி இல்லாமல் கற்களை வெட்டி கடத்துவதாக சொல்றது அர்த்தமே இல்லையென அசெம்பிளி மேடம் 'கூலா' சொல்றாரு.இங்கு சமப்படுத்தும் வேலைக்கு இடையூறு செய்து, அரசியல் லாபத்துக்காக தடுக்க பார்க்குறாங்க. லோக்சபா எலக் ஷன் நேரத்தில் அவதுாறு பரப்ப பார்க்குறாங்க. ஜனங்க ஏத்துக்கணுமேன்னு மேடம் விசிறிகள், 'ஜால்ரா' தட்டுறாங்க. இதுக்கு சுரங்கத்துறை என்ன சொல்லப் போகுதோ.பட்டா எப்போது?கோல்டு மைன்சில் கடைசியாக ஆஜர் பட்டியலில் இருந்த தொழிலாளர்கள், வீடுகளுக்கு வீட்டுரிமை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை செங்கோட்டை 'முனி' அறிவிச்சாரு.ஆனால், அவருக்கும் தெரியாமல் மைன்ஸ் செக்ரட்டரியே வீட்டுக்கான 'பொசிஷன்' சர்ட்டிபிகேட்டை தயார் செய்து 2023 நவம்பரிலேயே கொடுக்க தொடங்கினாரு. இந்த விஷயம் தெரிந்த முனி., அந்த சர்ட்டிபிகேட்டில பி.எம்., படம் இல்லை என கூறி, தடுத்து நிறுத்தினாரு.பொங்கலுக்கு முன் 3,200 தொழிலாளர்களுக்கு வழங்குவதாகவும் சொன்னாரு. பொங்கல் முடிந்து ஒரு மாதம் கடந்தும் வீட்டுக்கு உத்தரவாதம் இல்லை.வரும் பெரிய தேர்தல்ல, இவருக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பதிலேயே அவரது எண்ணம் இருக்குது. எனவே, தேர்தலுக்கு பிறகு தான் வீடு பிரச்னையை யோசிப்பாங்கன்னு தெரியுது.நிதி எவ்வளவு?கோல்டு சிட்டி தொகுதி உட்பட இன்டகிரேடட் இண்டஸ்ட்ரியல் பார்க், ஐந்து இடங்களில் அமைக்கப்படுமுன்னு பட்ஜெட்டில் சி.எம்., அறிவிச்சாரு. இதனால கோல்டு சிட்டி ஜனங்க மத்தியில ஒரு 'ரியாக் ஷனும்' இல்லை. தொகுதி மேடத்துக்கு துதி பாடுபவர்களும், அவர்களின் வழக்கமான வாட்ஸாப் வாழ்த்துகளையும் காணல.எத்தனை கோடியில் அமைய போகுது. இதுக்குள்ள என்னென்ன கம்பெனிகள் வரும்; உள்நாட்டு கம்பெனிகளா, வெளிநாட்டு நிறுவனங்களா; இதுக்கு எப்போ 'டெண்டர்' என தெரிவிக்காமல் தொழிற்பூங்கா அமைக்கப்படுமுன்னு மொட்டையா சொன்னா எப்படி. வரும்... ஆனா வராதுன்னு ராகம் இழுக்குறாங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ