உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தை உலுக்கிய விபத்து: நொறுங்கிய விமானம்; கதறிய நெஞ்சங்கள்!

குஜராத்தை உலுக்கிய விபத்து: நொறுங்கிய விமானம்; கதறிய நெஞ்சங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sa3eqjef&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் மோதியதில் மேகனி நகரில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதி பலத்த சேதம் அடைந்தது. விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தன்னார்வலர்கள் மீட்டனர். ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய ஆமதாபாத்தின் பி.ஜே.மருத்துவ கல்லூரி விடுதி உள்ள பகுதியில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தன. விமானம் மோதியதில் மருத்துவ கல்லூரியின் கேன்டீன் சேதமடைந்தது. பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதியில் புகைமண்டலமாக காட்சி அளித்தது. விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து உடல்களை மீட்டு ஆம்புலன்சில் மீட்பு படையினர் ஏற்றினர். மருத்துவ கல்லூரி விடுதியில் தீயை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு படையினர் அணைத்தனர். ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் திடீரென மேகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியது. கட்டட இடிபாடுகளில் விமான உதிரி பாகங்கள் சிதறி கிடந்தன. விமான விபத்து நடத்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூன் 13, 2025 12:44

இனி இலவசமாக பயணிக்க அனுமதித்தால்கூட ஒருவரும் அந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க பயப்படுவார்கள்.


Ramesh Sargam
ஜூன் 13, 2025 12:43

மனதை உலுக்கும் புகைப்பட பதிவுகள். கடவுளுக்கு இரக்கமில்லையா? இறந்தவர்கள் அப்படி என்ன பாவம் செய்துவிட்டார்கள்? ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் எல்லாம் நன்றாக சவுக்கியமாக இருக்கிறார்கள்.


பிரேம்ஜி
ஜூன் 13, 2025 14:30

சரியான கருத்து. ஊழல் அரசியல் வாதிகள் எல்லாம் இந்த நாட்டில் வளமாக நலமாக கோர்ட்டு போலீஸ் ED இறைவன் தர்மம் எதற்கும் பயப்படாமல் பேரன் பேத்தி வெளிநாடு சுற்றுலா என்று மக்கள் பணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் தான் ஆக்சிடெண்டு, போலீஸ், கோர்ட்டு, அதிக வரிகள் என்று அவஸ்தை படுகிறார்கள்!


Selvakumar Sampath
ஜூன் 13, 2025 10:42

கோர விபத்து, உயிர் இழந்த அனைவரது ஆத்மாவும் சாந்தி அடைய வேண்டுகிறேன் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 13, 2025 10:23

கோர விபத்து, உயிர் இழந்த அனைவரது ஆத்மாவும் சாந்தி அடைய வேண்டுகிறேன் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்


Mohan
ஜூன் 13, 2025 09:24

ஒட்டு மொத்த உயிர்களும் பறிபோனது ஒருவர் தவிர.. முதலில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம் ...அந்த ஒருவர் பிழைத்தது தெய்வ செயல் இன்றி வேற ஒன்றும் கிடையாது ...கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது நன்றாக புரியும், நம் முன்னோர் செய்த புண்ணியமோ, தாய் தந்தையர் செய்த நற்செயலோ, இல்லை அவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியமோ, இல்லை அவரடூய மனைவி , குழந்தைகள் செய்த தவமோ காப்பற்றி உள்ளது ... தர்மம் தலை காக்கும், அவனின்றி ஓர் அணுவும் அசையாது, பாவ புண்ணிய, கர்மவினைகளுக்கு, தெய்வ பக்திக்கும் நிச்சயம் பலன் உண்டு .... சுயநலமோடு நம் சிந்திக்க கூடாது நம் கடமையை செய்ய வேண்டும் தாய் தந்தையரை மதிக்க வேண்டும் ,தறி கேட்டு சீரழிய கூடாது திராவிட கூட்டம் போல் ...நன்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை