உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகை அடகு நிறுவனங்களின் அடாவடி; பார்லி.,யில் மத்திய அரசு எச்சரிக்கை

நகை அடகு நிறுவனங்களின் அடாவடி; பார்லி.,யில் மத்திய அரசு எச்சரிக்கை

வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசுகையில், “வாடிக்கையாளர் நகைகளை வங்கி அல்லாத தங்க நகை அடகு நிறுவனங்கள் ஏலம் விடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அவகாசம்

“வங்கி சாராத நிதி நிறுவனங்களில் தங்க நகை கடன் வாங்கியவர்கள், அதை திருப்பி கட்டுவதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்படாத நிலையில், இதுபோன்ற திடீர் ஏலங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ''இத்தகைய ஏலம் விடும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, அரசு ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளதா,” என, கேள்வி எழுப்பினார்.

இதற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்:

வங்கி அல்லாத கடன் நிறுவனங்கள் அல்லது வணிக வங்கிகள் அனைத்துக்குமே ஒரே மாதிரியான விதிமுறைகளைத் தான் ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.தங்க நகை ஏலம், பலகட்ட செயல்முறைகளின் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. வாடிக்கையாளர்களுக்கு நகை கடன் பாக்கி தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டு, அதன்பிறகே ஏல நடவடிக்கை என்ற சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.கடுமையான நிபந்தனைகளுக்கு பின்பே, ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாடிக்கையாளர் சார்ந்த மாவட்டத்துக்குள் தான் ஏலம் நடத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நேரில் வராவிட்டால் ஏலம் நடத்தவும் முடியாது.நகை மதிப்பீடு முழுமை அடையாவிட்டாலும் ஏலம் விட முடியாது. ஏலத் தொகை நிர்ணயம் செய்வதிலும் பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கான நகை விலையில், 80 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கக்கூடாது. தங்கத்தின் விலையை வங்கிகள் அல்லாத கடன் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதுமில்லை.

நடவடிக்கை

ஏல நடவடிக்கைகளுக்கு முன், இதுபோன்ற கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும். இவற்றை பின்பற்றாமல் நகை ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால், மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

c.mohanraj raj
பிப் 11, 2025 19:53

வங்கியின் வட்டி மாதத்திற்கு 100 ரூபாய்க்கு 50 பைசா இதே வெளிப்புறங்களில் 100 ரூபாய்க்கு ஐந்து ரூபாய் வட்டி பிறகு எப்படி மக்கள் முன்னேற்றம் அடைவார்கள்


venugopal s
பிப் 11, 2025 13:22

நான் சும்மா மிரட்டுவது போல் நடிக்கிறேன், நீயும் பயந்து விட்டது போல் நடித்தால் போதும் என்று இதற்கு அர்த்தமா?


Kanns
பிப் 11, 2025 12:14

Any Actions Against Excess Interest Seeking Pawn Brokers& Money Lenders And Long Cheating Loan Availers


Dharmavaan
பிப் 11, 2025 10:18

நடவடிக்கை என்ன என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்


Kasimani Baskaran
பிப் 11, 2025 08:27

பொட்டுத்தங்கம் கூட இல்லாத ஏழைகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ், தீம்கா ஆட்சிக்கு வந்தவுடன் தங்க நகை கடன் தள்ளுபடி செய்யும் என்று நம்ப வைத்து பரம ஏழைகளை கடன் வாங்கவைத்து கழுத்தறுத்து. அப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் இன்று ஒப்பாரி வைக்கிறார்கள்...


Dharmavaan
பிப் 11, 2025 10:19

மூடர்கள் இன்னும் இந்த கூட்டத்தை நம்பி ஒட்டு போடுகிறார்கள் .கேவலம்


அப்பாவி
பிப் 11, 2025 07:52

ஏன் நிதியமைச்சகமே தங்கம் அடகு பிடிக்கலாமே... நல்லா உருவலாமே..


கோமாளி
பிப் 11, 2025 06:25

வங்கி எனும் நிறுவனமயப்படுத்தப்பட்ட வட்டிக்கடையை பற்றி எதாவது சொல்லுங்களேன் மேடம்.


புதிய வீடியோ