வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் DMK Corruption Files என்ன ஆச்சு?
கோல்கட்டா: சர்ச்சைக்குரிய படமான தி பெங்கால் பைல்ஸ் சர்ச்சை தொடர்பாக, டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு போலீஸ் தடை விதித்தனர்.'தி பெங்கால் பைல்ஸ்' கதை களம், 1940களில் பிரிக்கப்படாத வங்கத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையை அடிப்படையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்தப் படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் டிரெய்லர் இன்று பிற்பகல் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப்படத்தின் டிரைலரை வெளியிட போலீசார் இன்று தடை விதித்தனர்.இது தொடர்பாக தி பெங்கால் பைல்ஸ் பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கூறியதாவது:தி பெங்கால் பைல்ஸ் படத்தின் டிரைலரை வெளியிட போலீசார் தடை விதித்துள்ளனர். இருப்பினும், இந்தப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது, கோல்கட்டா உயர் நீதிமன்றம் அதன் மீதான தடையை நிறுத்தி வைத்துள்ளது, இந்த நிலையில் தடை விதிப்பது, மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் இது.நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சிலர் வந்து அராஜகம் நடத்தியதை நான் இப்போதுதான் அறிந்தேன். இது யாருடைய உத்தரவின் பேரில் நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை? எங்களுக்குப் பின்னால் அந்த நபர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அனைத்து சோதனைகள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகும், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. எங்கள் நிகழ்ச்சியைத் தொடர எங்களுக்கு ஏன் அனுமதி இல்லை என்பதை ஹோட்டல் மேலாளர்களால் இன்னும் சொல்ல முடியவில்லை.இவ்வாறு விவேக் அக்னிஹோத்ரி கூறினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் DMK Corruption Files என்ன ஆச்சு?