உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கம் கடத்த முற்பட்ட சிறுவன் ரூ.12.46 லட்சம் கட்டிகள் மீட்பு

தங்கம் கடத்த முற்பட்ட சிறுவன் ரூ.12.46 லட்சம் கட்டிகள் மீட்பு

தேவனஹள்ளி: தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முற்பட்ட சிறுவன், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கினான்.பெங்களூரு, தேவனஹள்ளியின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், நேற்று முன்தினம் அதிகாலை 1:15 மணியளவில், 17 வயது சிறுவன், ஆமதாபாத்துக்கு செல்ல வந்திருந்தான். பாதுகாப்பு அதிகாரிகள், அவனை சோதனையிட்டனர்.அப்போது 'டோர் பிரேம் மெட்டல்' டிடெக்டரில், அலாரம் ஒலித்தது. அதன்பின் சிறுவனை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டான். அவன் அணிந்திருந்த செருப்பில் இரண்டு தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. 12.46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விசாரணை நடத்தியதில், சிறுவன் ராஜஸ்தானை சேர்ந்தவன் என்பதும், பெங்களூரில் தான் பணியாற்றிய நபரிடம், தங்கக்கட்டிகளை திருடிக்கொண்டு, ஆமதாபாத்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததும் தெரிந்தது.விமான நிலைய போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை