மேலும் செய்திகள்
ஓட்டுத் திருட்டு விவகாரத்தை விடவில்லை: ராகுல்
2 hour(s) ago | 23
துமகூரு: நடிகர் துகாலி சந்தோஷ் ஓட்டி சென்ற கார், ஆட்டோ மீது மோதியதில் அதன் டிரைவர் உயிரிழந்தார்.கன்னட நடிகர் துகாலி சந்தோஷ். திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த கன்னட பிக்பாஸ் சீசன் 10ல், போட்டியாளராக பங்கேற்றனர். பிக்பாசில் பங்கேற்றதால் கிடைத்த பணத்தில், புதிதாக கார் வாங்கினார்.நேற்று முன்தினம் இரவு, புதிய காரில் மனைவி மானசாவுடன், துமகூரில் இருந்து குனிகல் வழியாக, ஹொளேநரசிபுராவுக்கு சென்றார்.குனிகல் அருகே ஹொன்னஹள்ளி பகுதியில் சென்ற போது, அந்த வழியாக வந்த ஆட்டோ மீது, கார் மோதியது. இதில் ஆட்டோ டிரைவரான ஜெகதீஷ், 44 படுகாயம் அடைந்தார். குனிகல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று காலை இறந்தார்.இது குறித்து ஜெகதீஷ் குடும்பத்தினர், துகாலி சந்தோஷ் மீது குனிகல் ரூரல் போலீசில் புகார் செய்தனர். ஜெகதீஷ் குடி போதையில் ஆட்டோ ஓட்டி வந்ததாக, துகாலி சந்தோஷும் புகார் அளித்தார். இரு புகார்களின் மீதும் விசாரணை நடக்கிறது.
2 hour(s) ago | 23