உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு சட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு

வக்பு சட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சொத்துக்களை நிர்வகிக்கும் வக்பு வாரியங்களின் அதிகாரத்தில் திருத்தம் செய்வது, பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பது உட்பட, வக்பு சட்டத்தில் 40 திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில் இது தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இஸ்லாத்தின்படி, மதம் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காக கடவுளின் பெயரில் சொத்துக்களை தானமாக வழங்குவதே, வக்பு என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, எந்த ஒரு அசையும் அல்லது அசையா சொத்துக்களை, இந்த பணிகளுக்காக நன்கொடையாக வழங்கலாம். இதன் வாயிலாக வழங்கப்படும் நிலங்களில் கிடைக்கும் வருவாய், பள்ளி வாசல், தர்காக்கள், கல்வி மேம்பாடு உட்பட பல பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.தானமாக வழங்கப்பட்ட பின், அதன் மீது, தானமாக வழங்கியவரின் குடும்பத்தில் உள்ள எவரும் எதிர்காலத்தில் உரிமை கோர முடியாது. இது போன்ற தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை பராமரிக்க, 1954ம் ஆண்டில் வக்பு வாரிய சட்டம் இயற்றப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2013ல் பல மாற்றங்களை செய்தது. இதன்படி, புதிய சட்டம் அமலுக்கு வந்தது. வக்பு வாரிய சட்டத்தின்படி, மாநில அளவில் வக்பு வாரியங்களும், தேசிய அளவில் வக்பு கவுன்சிலும் அதன் செயல்பாடுகளை கவனித்து வருகின்றன. சொத்துக்களுக்கு உரிமை கோருதல், அதன் மீது மேல்முறையீடு செய்வது என, பல பிரச்னைகள் சமீபகாலமாக எழுந்துள்ளன. மேலும், பல சொத்துக்களை வக்பு சொத்துக்களாக அறிவித்து உரிமை கோருவதாகவும் புகார்கள் எழுந்தன.தமிழகத்தில் வேலுார், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதுபோல, நாட்டின் பல பகுதிகளில் பிரச்னை உள்ளது. டில்லியில் மட்டும் 198 புகார்கள் உள்ளன. இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, 40 திருத்தங்கள் வரை செய்யப்பட்டுள்ளன. இதற்கான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துக்களுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது, மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அளிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.வக்பு வாரியங்கள், சொத்துக்கு உரிமை கோரும்போது, அதை ஆய்வு செய்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. அதுபோல, வக்பு வாரியங்களின் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலங்கள் தொடர்பாகவும் ஆய்வுகள் நடத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது.குறிப்பாக, வக்பு வாரியத்தில் உள்ள அனைத்து சொத்துக்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் முன்னிலையில் முறைப்படி பதிவு செய்து, அந்த விபரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் இதில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நாடு முழுதும், 3-0 வக்பு வாரியங்கள் உள்ளன. புள்ளி விபரங்களின்படி, தற்போது நாடு முழுதும், 9.40 லட்சம் ஏக்கர் அளவுக்கு, 8.70 லட்சம் சொத்துக்கள், வக்பு வாரியங்களிடம் உள்ளன. இவற்றின் வாயிலாக, ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது மிகவும் குறைத்து காட்டப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதையடுத்து, வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும், அதன் கட்டுக்கடங்காத அதிகாரத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையிலும், வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தமிழ்வேள்
ஆக 06, 2024 11:02

ஆறாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற திருச்செந்துறை சிவன் கோவில், மற்றும் திருமுருகாற்றுப்படையில் போற்றப்பட்ட திருச்செந்தூர் இஸ்லாமிய வக்ப் போர்டுக்கு சொந்தமானது என்று சொல்லிகொண்டுள்ளார்கள். எழுத்தறிவே அற்ற முகம்மது இவர்களுக்கு அவருக்கு தெரியவே தெரியாத பாரதத்தின் தென்கோடி ஸ்தலங்களில் கோவில்களை பட்டயம் போட்டுக் கொடுத்தார் என்பதை நாம் நம்பவேண்டுமாம் ..என்ன கேவலம் இது ??பாரதம் ஹிந்து தேசம் என்று அறிவிக்கப்பட்டால் தவிர பாரதீயர்களுக்கு ஹிந்து தர்மத்துக்கு பாதுகாப்பு கிடையாது


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 10:03

மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தால் ஹிந்துக்கள் வெளியேறவேண்டிய அவசியம் ஏற்படும் ........ அதற்குள் மதம் மாறிவிடவேண்டும் ........ இல்லாவிட்டால் வெளியேறத் தயாராக இருக்கவேண்டும் ........


Venkatasubramanian krishnamurthy
ஆக 06, 2024 09:26

சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏதோவொரு கிராமத்தில் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை ஒருவர் நிலப்பதிவு செய்ய முற்படும்போது அந்த கிராமமே வக்ஃப் சொத்து என பத்திர அலுவலகத்தில் சொன்னதாக ஒரு செய்தி வந்தது. வழக்கம்போல் அதன்பின் அந்த செய்தியின் தொடர்ச்சிகள் மறைக்கப்பட்டுவிட்டது. இதுபோன்ற அராஜக நில அபகரிப்புகளுக்கு இந்த மசோதா முடிவு கட்டுமென நம்புகிறோம்.


Venkatasubramanian krishnamurthy
ஆக 06, 2024 09:26

சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏதோவொரு கிராமத்தில் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை ஒருவர் நிலப்பதிவு செய்ய முற்படும் போது அந்த கிராமமே வக்ஃப் சொத்து என பத்திர அலுவலகத்தில் சொன்னதாக ஒரு செய்தி வந்தது. வழக்கம்போல் அதன்பின் அந்த செய்தியின் தொடர்ச்சிகள் மறைக்கப்பட்டுவிட்டது. இதுபோன்ற அராஜக நில அபகரிப்புகளுக்கு இந்த மசோதா முடிவு கட்டுமென நம்புகிறோம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 09:06

கான் கிராஸ் ஹிந்துக்களுக்குச் செய்த பற்பல கொடுமைகளில் இதுவும் ஒன்று ........


GMM
ஆக 06, 2024 08:06

அரசுக்கு வரி செலுத்தி, கிரயம் பெற்று முறையாக தானம் செய்த சொத்துக்கள் மட்டும் தான் சட்டப்படி செல்லும். எந்த மூல ஆவணங்கள் இல்லாமல் நீண்டகால உபயோக, ஆக்கிரமிப்பு அடிப்படையில் அல்லது ஆளும் கட்சி பரிந்துரை அடிப்படையில் மாறுபடும் சொத்து நிரந்தரம் அல்ல. ஆவணங்கள் அடிப்படையில் அரசுக்கு, முன்னாள் நில உரிமையாளர், பரிவர்த்தனைக்கு உட்பட்டது. இவைகள் வாரிய சொத்தில் இணைக்க முடியாது. தானத்தின் நோக்கம் வழிபாடு, ஏழைக்கு உதவ மட்டும். கல்வி, மருத்துவம் போன்ற பிற பயன்பாட்டிற்கு செலவு செய்ய முடியாது. பெண் நியமனம் நன்று. ஒத்த இயல்பு கொண்ட பிற மத மக்கள் பணிபுரிய நியமிக்கலாம்.


Dharmavaan
ஆக 06, 2024 07:55

ஊரான் சொத்தை கொள்ளை அடிக்கும் இந்த வாரியத்தை மூடினால் என்ன முஸ்லிம்களுக்கு மட்டுமே ஏன் இந்த நாட்டில் அது நிறுத்தப்பட வேண்டும்


Sathyanarayanan Sathyasekaren
ஆக 06, 2024 07:28

இதனை முதல் முறை ஆட்சிக்கு வந்த போதே செய்திருக்க வேண்டும், திருட்டு ஊழல் கான் காங்கிரஸ் போலி காந்தி குடும்பம் எல்லையற்ற சலுகைகளை உரிமைகளை கத்திக்கு பயந்து மதம் மாறிவர்களுக்கு கொடுத்தது. திருச்சி அல்லூரில் 2000 வருட பழமையான சிவாலயத்தையும் அதை சார்ந்த கிராமம் மற்றும் நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமாம். அது போல டெல்லியில் ஸ்கேம் கான் காங்கிரஸ் பதவி விலகும் இரு நாட்களுக்கு முன் பல கோடிக்கணக்கான தாரை வர்த்தார்கள்


Svs Yaadum oore
ஆக 06, 2024 07:13

மதம் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காக கடவுளின் பெயரில் சொத்துக்களை தானமாக வழங்குவதே, வக்பு என்று அழைக்கப் படுகிறதாம்.. இதே போல் ஹிந்து மதத்தில் சொத்துக்களை கோவிலுக்கு தனமாக வழங்கினால் அது ஏன் ஹிந்து அற நிலையத்துறைக்கு போகனும்?? இதே போல் சட்டம் கொண்டு வந்து ஹிந்து நல வாரியம் என்று ity அமைப்பு ஏற்படுத்தி அந்த சொத்துக்களை ஹிந்து நல பணிகளுக்கு ஏன் பயன்படுத்த வில்லை?? எல்லா கோவில் சொத்துகளும் கோவில் வருமானமும் விடியல் திராவிட அரசே இங்கு எடுத்துக்கொண்டு பிறகு அதை சமூக நீதி மத சார்பின்மையாக செலவு செய்வார்கள் ....


Pandi Muni
ஆக 06, 2024 07:09

வஃபு வாரியம் என்ற பெயரில் இந்துக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் இந்து கோயில்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இரண்டுமே அழித்தொழிக்கப்படவேண்டியவை.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ