உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்வு தான் அனைத்தும் என்ற மனநிலையுடன் வாழக்கூடாது: பிரதமர் மோடி அறிவுரை

தேர்வு தான் அனைத்தும் என்ற மனநிலையுடன் வாழக்கூடாது: பிரதமர் மோடி அறிவுரை

புதுடில்லி: '' தேர்வு தான் அனைத்தும் என்ற மனநிலையுடன் மாணவர்கள் வாழக்கூடாது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், 'பரிக்சா பே சார்ச்சா' என்ற தலைப்பில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அப்போது பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வுக்கு தயாராவது குறித்தும், அழுத்தத்திற்கு ஆளாகாமல் தயாராவது குறித்து அறிவுரையும், ஆலோசனையும் வழங்குகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=opap6qdk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், டில்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 36 மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: நோய் இல்லை என்பது நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதற்கு அர்த்தம் கிடையாது. தூக்கமும் ஊட்டச்சத்தை சார்ந்தது தான். தூக்கம் குறித்து மருத்துவ அறிவியலும் கவனம் செலுத்துகிறது. நமது சமூகத்தில், மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், வீட்டில் பதற்றமடையும் சூழல் உள்ளது. உங்களுக்கு அழுத்தம் இருக்கலாம். ஆனால், நீங்கள் அதற்கு ஆளாகாமல், அதனைப்பற்றி கவலைப்படாமல் உங்களை தயார்ப்படுத்த வேண்டும். கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களை தனிமைப்படுத்தக்கூடாது. தங்களது ஆர்வம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள அவர்களுக்கு சுதந்திரம் தேவை.உங்களுக்கு நீங்களே சவால் நிர்ணயித்துக் கொள்ள உங்களது மனதை நீங்கள் தயார்படுத்த வேண்டும். ஒரு தலைவர் தான் போதிக்கும் விஷயங்களை புரிந்து கொண்டு, மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் போது தான் அவர் ஒரு தலைவராக மாற முடியும். மரியாதையை கேட்டு பெறக்கூடாது. உங்கள் பழக்கத்தையும், நடத்தையையும் மாற்றும்போது மரியாதை தானாக கிடைக்கும். மக்கள் உங்கள் நடத்தையை ஏற்றுக் கொள்வார்கள் ஆனால், நீங்கள் போதிப்பதை ஏற்க மாட்டார்கள். தலைவர்களின் நடத்தையில் இருந்து மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். மாணவர்கள் ரோபோக்கள் அல்ல. நாம் முழுமையான வளர்ச்சிக்காக படிக்கிறோம். புத்தகங்களில் சிக்கிக் கொண்டால் மாணவர்கள் வளர முடியாது. மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான செயலை செய்யும்போது தான் அவர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட முடியும். தேர்வு தான் அனைத்தும் என்ற மனநிலையுடன் வாழக்கூடாது. முடிந்தவரை அறிவைப் பெற வேண்டும். ஆனால், தேர்வுகள் தான் அனைத்தும் என்ற மனநிலையுடன் இருக்கக்கூடாது. முடிந்த வரை எழுதும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
பிப் 10, 2025 13:19

இதைத்தானே நீட்டை நீக்க மேலும் தமிழக முதல்வர் சொல்லிட்டு வர்ராரு?


Ks iyer
பிப் 10, 2025 12:45

நல்ல அறிவுரை, ஆனால் கல்லூரிகளில் சாதிவாரியான இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும். கல்லூரி / உயர்கல்வியில் இடஒதுக்கீடு கொள்கையை ரத்து செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து பிரிவினருக்கும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை