உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போக்சோ வழக்கில் அரிதான தீர்ப்பு; தனி அதிகாரம் பயன்படுத்தி குற்றவாளியை விடுவித்தது சுப்ரீம் கோர்ட்

போக்சோ வழக்கில் அரிதான தீர்ப்பு; தனி அதிகாரம் பயன்படுத்தி குற்றவாளியை விடுவித்தது சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசியலமைப்பு சட்டம், 142வது விதியின் கீழ், உச்ச நீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, போக்சோ வழக்கு குற்றவாளியை விடுதலை செய்தது.சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்ட அந்த நபர், பின்னர் திருமணம் செய்து கொண்டதால், 'இந்த குற்றத்தை காமமாக பார்க்கக்கூடாது; காதலாக கருத வேண்டும்' எனவும் விளக்கம் அளித்துள்ளது.

மேல்முறையீடு

நம் நாட்டின் சட்டப்படி விருப்பத்தின்படி உறவு கொள்வது குற்றமல்ல. அதே சமயம் விருப்பத்தின்படி சிறுமியிடம் உறவு கொள்வது போக்சோ சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில், அந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். இந்தச் சூழலில், சிறுமி மேஜராக மாறியதும், அந்த நபர் அவரையே திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, 1 வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி அந்த நபர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், போக்சோ சட்டத்தில் இருந்து விடுதலை செய்யுமாறு அந்த நபரின் மனைவி, மாமனார் இருவரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்த மனு மீதான வாதங்கள் மற்றும் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாஷி அடங்கிய அமர்வு இவ் வழக்கை மிக அரிதானதாக கருதி, தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, அந்நபரை விடுவித்தது. இது தொடர்பாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:சில குறிப்பிட்ட வழக்குகளில் முழு நீதி வழங்குவதற்கு என, இந்த நீதிமன்றத்திற்கு அரசமைப்பு சட்டம் தனி அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அநீதியான சூழல்களை தவிர்க்க அந்த அதிகாரம் பயன்படுகிறது. சட்டத்தின்படி மேல் முறையீட்டாளர் ஒரு கொடூரமான குற்றத்தின் குற்றவாளி என கண்டறியப்பட்ட நிலையில், மனைவிக்கும், அவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை வைத்து தற்போதைய வழக்கை ரத்து செய்வது என்பது இயலாத காரியம்.அதே சமயம், மேல் முறையீட்டாளர் மனைவி எழுப்பும் இரக்கம் மற்றும் பச்சாதாபத்திற்கான அழுகுரலை புறந்தள்ளுவதும் அநீதியாகவே படுகிறது. மேல்முறையீட்டாளரும், பாதிக்கப்பட்டவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதுடன், இல்லற வாழ்வை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை

போக்சோ சட்டத்தின்படி மேல்முறையீட்டாளர் செய்தது கொடுங்குற்றமாக கருதப்படுகிறது. எனினும், அந்த குற்றம் காமத்தால் ஏற்பட்டது அல்ல; அன்பினால் ஏற்பட்டது என்பதை உணர முடிகிறது . குற்றத்தால் பாதிக்கப்பட்டவரும், அவரது குடும்பத்தினரும், மேல்முறையீட்டாளருடன் அமைதியாக வாழ விருப்பப்படுகின்றனர்.இந்த சூழலில் மேல்முறையீட்டாளர் மீது குற்றவியல் சட்டத்தின்படி இந்த நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தால், அது ஒட்டுமொத்த குடும்பத்தையும் தீர்க்கவே முடியாத பிரச்னையில் தள்ளிவிடும். எனவே, இந்த அம்சங்களை கருதி, அரசமைப்பு சட்டம் 142வது பிரிவு வழங்கிய தனிப்பட்ட அதிகாரத்தை பயன் படுத்தி, மேல்முறையீட்டாளருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கை மற்றும் தண்டனையை ரத்து செய்ய உத்தரவிடுகிறோம்.அரிதான சூழலில், இப்படியான தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதையும் இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது. எனவே, வேறு எந்தவொரு வழக்கிற்கும் இந்த தீர்ப்பை முன் உதாரணமாக கொள்ளக்கூடாது. இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Anantharaman Srinivasan
நவ 02, 2025 22:47

அடுத்தவன் இதே மாதிரியான தவறை செய்து பின் திருமணம் செய்து கொண்டு நல்லமுறையில் வாழ்க்கையை நடத்தினால் வாழ்நாள் தண்டனையா..?


SUBBU,MADURAI
நவ 02, 2025 14:16

எப்பிட்றா இப்படி புதுசு புதுசா வார்த்தைகளை தேடி கண்டுபிடித்து தீர்ப்பு கொடுக்கிறீங்க? இதைத்தான் எங்கள் தீர்க்கதரிசி கட்டுமரக் கருணாநிதி அப்போதே சொன்னார் நீதிபதிகள் யாரும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல என்று!


Shekar
நவ 02, 2025 10:15

ஆஹா...தெய்வீக தீர்ப்பையா உங்கள் தீர்ப்பு. அந்த குற்றம் காமத்தால் ஏற்பட்டது அல்ல அன்பினால் ஏற்பட்டது என்பதை உணர முடிகிறது.. ஆகா...ஒரு வாசகம்னாலும் திருவாசகம்மைய்யா.


அப்பாவி
நவ 02, 2025 09:29

செஞ்ச தப்புக்கு நாலு வருஷம் உள்ளே வெச்சுட்டு விடுதலை செஞ்சாலும்.ஒரு நியாமிருக்கும். இது அநியாயமால்ல இருக்கு.


duruvasar
நவ 02, 2025 07:37

பேரறிவாளன் வெளிய வந்ததும் இதே செக்சன் 142 வழியில்தான். ஆக இந்த பிரிவு விலைமைமைதிப்பற்றது என்பது புரிகிறது.


Kasimani Baskaran
நவ 02, 2025 07:28

இதே பாணியில் அந்த பத்து ரூபாய்க்கும் தீர்ப்பு வரலாம். அதற்கு ஒரு முன்னோட்டம் போல இருக்கிறது. கோடி முறை கொடுத்தால் தீர்ப்பு கிடைக்காதா என்ன?


GMM
நவ 02, 2025 07:27

142வது விதியின் கீழ், உச்ச நீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்த, ஜனாதிபதி முன் அனுமதி பெற வேண்டும். அரசியல் சாசன புத்தகம் பேசாது. விசேஷ தீர்ப்பு சமூக தாக்கம் உருவாகும். சட்டத்தின்படி மேல் முறையீட் டாளர் ஒரு கொடூரமான குற்றத்தின் குற்றவாளி என்றால், விட்டுவிக்க கருத்து கூறி நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கொலிஜியம் ஏற்பது போல் மத்திய அரசு பயந்து ஏற்கும்.


Raj
நவ 02, 2025 06:34

முதலில் 142 விதியை நீக்க வேண்டும், இனி இப்போ போக்சோவில் சிறை சென்றவன் வெளியில் வந்து மீண்டும் குற்றம் செய்வான். இது போன்றவர்களுக்கு பூலான் தேவியின் தீர்ப்பு தான் சரியானது. குற்றங்கள் அதிகரிக்க நீதிமன்றத்தின் தவறான தீர்ப்புகள் தான். சட்டங்களை நிறைவேற்றி அதிலிருந்து தப்பிக்க ஓட்டையையும் வைத்திருக்கிறார்கள். கேவலமான இந்திய சட்டங்கள்.


கனோஜ் ஆங்ரே
நவ 02, 2025 08:18

தான் பிறந்த நாட்டில் இருந்து கொண்டு.... அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை கேவலம் என்பது...


Shekar
நவ 02, 2025 10:11

அரசியல் அமைப்பு சட்டத்தை யாரும் குறைத்து மதிபிடுவதில்லை, இன்று அவை விலைக்கு வாங்கப்படுகிறது, நீதி அரசர் வீட்டு அறையில் பல கோடி பணம் மூட்டை முட்டையாய் பிடிபடுகிறது. உபிகளுக்கு இதை சாதாரணமாய்தான் எண்ணத்தோன்றும். வருடம் வரும் 30,000 கோடிக்கு முட்டு கொடுப்பவர்கள் சட்டத்தை மதிக்கிறார்களாம்.


guna
நவ 02, 2025 10:21

கேவலம்


Thravisham
நவ 02, 2025 05:05

சபாஷ், ஆன்றோர் சான்ட்றோர் அளித்த தீர்ப்பு போல் இருக்கிறது.


Indhuindian
நவ 02, 2025 05:03

சினிமாவுலயும் கட்ட பஞ்சாயத்து இப்படிதான் காண்பிக்கிறாங்க


முக்கிய வீடியோ