உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறந்தவர் உடலை மரத்தில் கட்டி துாக்கி சென்ற அவலம் 

இறந்தவர் உடலை மரத்தில் கட்டி துாக்கி சென்ற அவலம் 

கார்வார்: சாலை வசதி இல்லாததால், இறந்தவர் உடலை, மரத்தில் கட்டி துாக்கி சென்ற அவலம் நடந்து உள்ளது.கார்வார் அருகே உள்ளது குட்டஹள்ளி கிராமம். வனப்பகுதிக்குள் உள்ள இந்த கிராமத்திற்கு செல்ல, பல ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லை. சாலை அமைத்து தரும்படி, அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இந்நிலையில், குட்டஹள்ளி கிராமத்தின் ராமமுன்னே கவுடா, 65 என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு, கார்வார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.மருத்துவமனையில் இருந்து அவரது உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது. கிராமத்திற்குள் செல்ல சரியான சாலை இல்லாததால், 2 கிலோ மீட்டர் துாரத்திற்கு முன்பே, ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது.ஒரு மரத்தில் ராமமுன்னேகவுடா உடலை கயிற்றால் கட்டி, அவரது உறவினர்கள் துாக்கி சென்றனர். இதை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வீடியோ பரவியதால், அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை