உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் சட்ட திருத்தம் முஸ்லிம் அமைப்பை கைப்பற்றும் நோக்கமா? சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்

வக்ப் சட்ட திருத்தம் முஸ்லிம் அமைப்பை கைப்பற்றும் நோக்கமா? சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அனல் பறக்கும் விவாதம் நடந்தது.வக்ப் போர்டு சொத்து தொடர்பாக பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் மீதான விசாரணை, மே 20ம் தேதியான இன்று, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த விவாதத்தில் அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா , 3 பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும் என்றார். மேலும், ''சொத்து யாருக்கு என்பதில் கோர்ட்டால், பயனீட்டாளர்கள், வக்ப் போர்டால் அடையாளப்படுத்தும் சொத்துக்களை அறிவிக்க முடியாத நிலை உள்ளது. வக்ப், கோர்ட், பத்திரம், பயனீட்டாளர்களில் யார் அறிவிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது'' என்றார்.மனுதாரர்கள் தரப்பில் கபில்சிபல் வாதிடுகையில், ''இந்த வழக்கை தனித்தனியாக ஒவ்வொரு பிரிவாகவும் விசாரிக்க முடியாது. வக்ப் சட்ட திருத்தத்தின் பின்னணியில் உள்ள யோசனைகள் முழு முஸ்லிம் அமைப்பையும் காப்பாற்றுவது போன்ற கைப்பற்றும் நோக்கம் கொண்டதாகும். நீங்கள் மசூதிக்கு சென்றால் பார்க்கலாம் அங்கு காணிக்கை இல்லை. கோயில்களை போல் ஆயிரக்கணக்கான கோடிகள் இல்லை''.

நானும் சென்றுள்ளேன்:

' ஆமாம் நானும் ஆலயங்கள், மசூதிகள் சென்றிருக்கிறேன், இது அடிக்கடி நடந்திருக்கிறது' என்றார் தலைமை நீதிபதி கவாய்.

எப்போதும் மாற்ற முடியாது

மேலும் கபில்சிபல் வாதிடுகையில் ; நான் மசூதிகள் குறித்து பேசுகிறேன். ஒரு மத நிறுவனத்திற்கு அரசு நிதியளிக்க முடியாது. வக்ப் சொத்துக்களை எந்தவிதமான வழிமுறைகளையும் பின்பற்றாமல் கையகப்படுத்தும் வகையில் தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. வக்ப் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வக்பு என்பது அல்லா அல்லது கடவுளுக்காக கொடுக்கப்படுவது. அவ்வாறு கடவுளுக்கு கொடுக்கப்படுவதை வேறு யாருக்கும் மாற்ற முடியாது. ஒருமுறை வக்பு என அறிவிக்கப்பட்டால் அதை எப்போதும் மாற்ற முடியாது. பதிவு செய்யப்பட்ட சொத்தில் தற்போது ஒருவர் சந்தேகம் எழுப்பினால் அந்த சொத்து பறிபோகும் நிலை உள்ளது. பழங்கால ஒரு அமைப்பை அதன் தன்மையை இழக்க செய்திடும். மேலும் சிறுபான்மை உரிமையில் தலையிடுவதாகும். இவ்வாறு வாதிட்டார் கபில்சிபல். வாதுரைகளை கேட்ட நீதிபதிகள், மேலும் முந்தைய 1995 வக்ப் சட்டத்தின் விதிகளை நிறுத்தி வைப்பதற்கான எந்தவொரு மனுவையும் பரிசீலிக்கப் போவதில்லை என்று இன்று தெளிவுப்படுத்தினர். மேலும் இந்த விவகாரம் ஒரு அரசியல் சாசனம் தொடர்பானது. வழக்கு வலுவானதாக இல்லாத பட்சத்தில் தேவையில்லாமல் கோர்ட் தலையிடுவதில்லை. வக்ப் போர்டு சொத்து தொடர்பாக அவுரங்காபாத்தில் பல்வேறு சர்ச்சை சொத்துக்கள் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

Ramalingam Shanmugam
மே 28, 2025 18:09

ஏன்டா சிப்ஸ் என்ன சொல்லுது


Riveris
மே 27, 2025 12:34

டுபாக்கூர் கபில் வக்ஃப் சட்டம் வந்த போது இந்தியாவை கொள்ளையடிக்கும் திட்டமா என்று கேட்காத நீ. .... இன்று திருத்த சட்ட மசோதாவை மட்டும் இவ்வளவு கேள்வி கேட்கிறாயே‌. வக்ஃப் பெயரில் முஸ்லிம்களை வைத்து கொள்ளையடித்தது அரசியல் அமைப்புக்கள் தான்.


K V Ramadoss
மே 25, 2025 12:06

கபில் சிப்பல் வாதம் அலங்காரமாக இருக்கிறதே தவிர அர்த்தம் உள்ளவையாக இல்லை. முஸ்லீம் அமைப்பை கைப்பற்றுவதாக, வக்ப் சட்டத்திருத்தத்தில் எந்த ஷரத்து இருக்கிறது என்று தெளிவாக வாதாட வேண்டும். அதை விட்டு விட்டு பொதுவாக தன் அனுமானத்தையே ஒரு ஆதாரமாக வாதம் செய்கிறார் இந்த மூத்த வழக்கறிஞர். இவர் ஒரு அரசியல்வாதி, பணம் இட்டும் மூத்த வக்கீலே தவிற நியாயமாக பேசுபவர், வாதாடுபவர் அல்ல.


Narayanan
மே 22, 2025 15:52

கபில்சிபில் சொத்து எவ்வளுவு இருக்கும் ? இவர்கள் வரிவிலக்கு பெற்றவர்களா ?


S.V.Srinivasan
மே 21, 2025 09:14

கை நீட்டி துட்டு வாங்கீட்டீல்ல நீ அப்படிதான் பேசுவ.


RAJ
மே 21, 2025 00:39

என் நாட்ல கொள்ளை அடிச்சுட்டு.. என் மக்களை மதம் மாற்றி.. உங்களுக்கு வக்ப் சட்டம் வேற... இதுக்கு கபில்சிபில்ன்னு ஒரு தரம்கெட்ட தேசதுரோகி.. .... உங்களை எல்லாம் வெரட்டி வெரட்டி வெளுக்கணும்..


M Ramachandran
மே 20, 2025 22:18

கபில்சிபில் ஒரு பணபேய். அந்த ஆள் வாதாடும் கேஸெல்லாம் பணத்திற்காக நியாயத்திற்காக ஒரு கேசும் வாதாடிய தில்லை நாட்டின் விரோதி.


Kumar
மே 20, 2025 21:38

தற்குறிகளால் நாட்டின் நலம் மக்கள் நலம் என்று எதுவும் இல்லாமல் சுயநலம் தான் மித மிஞ்சியிருக்கும்


ஆரூர் ரங்
மே 20, 2025 21:24

கடைத் தேங்காயை எடுத்து பிள்ளையாருக்கு உடைத்தது போல யாருடைய சொத்தையோ( மூலப்பத்திரமே இல்லாமல வக்புக்கு தானம் செய்துவிட்டு அதற்கு தன்னைத்தானே அறங்காவலராக நியமித்துக் கொள்ளும் கொடுமையை என்ன சொல்ல? பறிகொடுத்தவனுக்குத்தான் தெரியும் அதன் வலி.


தாமரை மலர்கிறது
மே 20, 2025 21:19

கட்டப்பஞ்சாயத்து முறையை ஒழித்து, தனி மனிதர்களின் சொத்துக்களை ஆட்டையபோடுவதை தடுப்பதற்காக அரசு தலையிட வேண்டும் என்று இஸ்லாமியர்கள் விடுத்த கோரிக்கையாலே தான், வக்பு சட்டம் வந்தது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை