உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உறைபனியில் இரவு முழுதும் சிக்கிய தேர்தல் கமிஷனர்

உறைபனியில் இரவு முழுதும் சிக்கிய தேர்தல் கமிஷனர்

புதுடில்லி, உத்தரகண்ட் சென்ற தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமாரின் ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, அங்குள்ள குக்கிராமத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உறைபனியில் இரவு முழுதும் அந்த கிராமத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.உத்தரகண்ட் மாநிலத்தில் மலை கிராமங்களில் அமைந்துள்ள ஓட்டுப்பதிவு மையங்களில் தேர்தல் அலுவலர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து நேரடியாக அறிவதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், முனிசியாரி தாலுகா அருகே குக்கிராமம் ஒன்றில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.அந்த வானிலையில் மீட்பு ஹெலிகாப்டர் வருவதும் சிரமம் என்பதால், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் இரண்டு தேர்தல் அதிகாரிகள், இரண்டு பைலட்டுகள் ஆகியோர் அந்த கிராமத்திலேயே, ஒரு வீட்டில் இரவு முழுதும் தங்கினர். அங்கு, வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழ் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வானிலை நேற்று காலை சீரடைந்ததும், தலைமை தேர்தல் கமிஷனருடன் ஹெலிகாப்டர் பத்திரமாக புறப்பட்டுச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை