உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திஹார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கை கைது செய்தது அமலாக்கத்துறை

திஹார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கை கைது செய்தது அமலாக்கத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணை

தி.மு.க., முன்னாள் நிர்வாகியும்,சர்வதேச போதை கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து டில்லி திஹார் சிறையில் அடைத்தனர். அவர், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nfvg6tky&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். அதில், பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது

இந்நிலையில், இது தொடர்பாக கடந்த 26ம் தேதி நடந்த விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ram
ஜூன் 29, 2024 09:05

திராவிட கழகத்தின் தூண்கள் எத்தனை கழன்டு உருன்டு ஓடுவதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Barakat Ali
ஜூன் 28, 2024 19:01

அயலக இளைஞர் ஒன்றியத்துக்கு தங்க முட்டையிடும் வாத்து ...... ஆனா டீம்காவுக்கு அப்பப்ப ஒன்றியம் கொடுக்குற எனிமா ........ வாத்தை நிச்சயம் ஒரே நாள்ல அறுக்க மாட்டாங்க .....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 20:51

டீம்கால இருந்து ஏக்நாத் ஷிண்டேக்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கலையா ஒன்றியத்துக்கு ????


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 18:46

உத்தவ் தாக்கரே பிச்சுக்கிட்டாரு .. இப்போ சந்திரபாபு, நிதிஷ் ஆதரவு கொடுத்துக்கிட்டு இருக்காங்க .... அவங்க ரெண்டு பேரும் பிச்சுக்கிட்டா திமுக முட்டு கொடுத்தே ஆகணும்...... அதுக்கு திமுகவை சரிகட்டணும் .... அதுக்குதான் துருப்பு சீட்டு இந்த மெத்து மன்னன் ....


தமிழன்
ஜூன் 28, 2024 17:23

திமுக முன்னாள் நிர்வாகியை கைது செய்தவர்கள், இவர் குற்றவாளி என்று தெரிந்தே கட்சியில் சேர்த்த கட்சி தலைவர் மீது எப்போது நடவடிக்கை எடுப்பாங்க..? நாட்டை தவறான பாதையில் வழிகாட்ட குற்றவாளிகளை கட்சியில் சேர்த்த தால் , அரசியல் மற்றும் ஆட்சி என்ற போர்வையில் நாட்டு மக்களை தவறான பாதையில் வழி படுத்துகிறது என கட்சியை தடை செய்வார்களா?


duruvasar
ஜூன் 28, 2024 17:13

தொட்டுபார், சீண்டி பார். இப்ப தொட்டாச்சு , சீண்டியும் பார்த்தாகிவிட்டது. அடுத்தது என்ன என தெரியவில்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 16:57

சிறையில் இருக்குறவனையே மறுபடி மறுபடி கடிச்சு விளையாடுறதுல என்ன சுகம் இருக்கோ ????


தமிழ்வேள்
ஜூன் 28, 2024 17:51

சவுக்கு சங்கரை மீண்டும் மீண்டும் சிறையில் வைத்தே அரெஸ்ட் செய்த திராவிட ஆட்சியாளர்களை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது ....


Lion Drsekar
ஜூன் 28, 2024 16:55

பிறத்தல், வளர்தல் , படித்தால், வேலைக்கு செல்லுதல், திருமணம் , குழந்தைகள் , பேரன் பேத்தி , வயது மூப்பு இறப்பு . இதுபோல் திடீர் பணக்காரர்கள் சிறை, குண்டர் சட்டத்தில் பல முறை சென்றவர்கள் என்ற பல பட்டங்கள் , விடுதலை, மக்கள் பிரநிதி, முக்கிய பிரமுகராகி மீண்டும் , குடும்பத்துக்கு சொத்து சேர்த்தல் , மக்க்கள் வரிப்பணத்தில் சம்பளம், பென்சன் .. இதுதான் மக்களாட்சியின் தத்துவம் . மனித நேயம் இருந்தவரை சிறைக்கு சென்றவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று சரித்திரம் சொல்லும், அதே போன்று தற்போது நடைபெறும் பரிணாம வளர்ச்சியையும் நாம் பார்க்கிறோம் . வாழ்க இவ்வையகம் . வந்தே மாதரம்


Anand
ஜூன் 28, 2024 16:37

இனிமேல் ஆட்டம் சூடுபிடிக்கும்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 18:48

ஒண்ணுமே நடக்காது ....... ஐம்பத்தாறு அங்குலம் விக்கிரக வழிபாட்டாளர்களை காப்பாத்தாது ......


மோகனசுந்தரம்
ஜூன் 28, 2024 16:35

இந்த அயோக்கியத்தனம் வேண்டாம். ஜெயிலில் உள்ளவனையே கைது செய்வார்களாம் பின்பு கோர்ட்டு அவனை விடுவித்து விடுமாம். என்னடா உங்க சிஸ்டம் ஒன்றுமே சரியில்லையே.


Bala
ஜூன் 28, 2024 16:25

எப்பொழுது?


மேலும் செய்திகள்