உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒமர் அப்துல்லா கொண்டு வந்த முதல் தீர்மானம் : மத்திய அரசு செவி சாயக்குமா ?

ஒமர் அப்துல்லா கொண்டு வந்த முதல் தீர்மானம் : மத்திய அரசு செவி சாயக்குமா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆளும் தேசிய மாநாடு கட்சி முதல் அமைச்சரவை தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.90 தொகுதிகளை கொண்ட ஜம்மு - காஷ்மீருக்கு கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ., 29 தொகுதிகளை பிடித்தது. தேசிய மாநாடு கட்சியின் ஒமர் அப்துல்லா கடந்த 16-ம் தேதி பதவியேற்றார்.இந்நிலையில் இன்று (அக்.,18) தேசிய மாநாடு கட்சியின் முதல் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து முதல்வர் ஒமர் அப்துல்லா விரைவில் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தேசிய மாநாடு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எங்களின் கோரிக்கையை மத்திய அரசு நிச்சயம் பரிசீலித்து நிறைவேற்றும் என தேசிய மாநாடு கட்சி மூத்த தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

siva
அக் 18, 2024 23:36

அவர்கள் தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநில அந்தசுது கோரினால் நிச்சயம் மத்தியரசு வழங்கும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் அவர்களுக்கு உரிய அந்தசுது வழங்கப்படவேண்டும், மாநில அரசு பாக் பயங்கரவாதிகளின் ஊடுருவலை வெற்றிகரமாகக் கையாள முடியும். தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை நாட முடியும்.


Vijay D Ratnam
அக் 18, 2024 23:27

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்து, ஒன்றுபட்ட காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம். அதுவரை காஷ்மீர் யூனியன் டெரிட்டோரியாக இருக்கட்டும். மக்கள் யாரும் மாநில அந்தஸ்து கேட்கவில்லை. அரசியல்வியாதிகள்தான் கொலைப்பசியில் இருக்கிறார்கள்.


ஆரூர் ரங்
அக் 18, 2024 21:08

அங்கு உண்மையான ஜனநாயகம் நிலை பெரும் போது மாநில அந்தஸ்து பற்றி மெதுவாக யோசிக்கலாம். ஒரு முஸ்லிமல்லாதவர் முதல்வரான பின்னர்.


Palanisamy T
அக் 19, 2024 11:12

உங்களின் வெளிப்படையான மனம் திறந்த சொற்கள் எல்லோரும் சிந்திக்க வேண்டியவொன்று. இதுதான் மதச் சார்பற்றக் கொள்கையென்பதை இம் மாநில முதல்வருக்கு இந்தியமக்கள் பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டும். இன்றும் நிறம் மாறாத முதல்வர். இப்போது மாலத் தீவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோது நடந்தது இந்திய மக்களுக்கு நல்லப்பாடம். அன்று 1971-இல் பாகிஸ்தான், வங்கதேசம் பிரிவினையின் போது அன்று வங்கத்தில் நடந்த கிளர்ச்சிப் போரில் இந்தியா செய்த உதவியையும் மறந்து, இன்று வங்க தேசத்தில் இந்திய நாட்டிற்கு எதிராக வங்க கிளர்ச்சிக்காரர்கள் நடந்துக் கொண்டது மறக்கமுடியாது. இந்தியா மட்டும் இல்லை யென்றால் இன்று வங்கதேசமில்லை. - "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று- குறள். .


கிஜன்
அக் 18, 2024 20:08

காஷ்மீரில் ....பாரதத்தின் தேசியக்கொடி பறக்க வரும் சி.எம். கான்வாயை டி.வி.யில் பார்த்தபோது .... ஜனநாயகத்தின் வலிமையை உணர முடிந்தது ... ஒமரும் ...மூச்சுக்கு முன்னூறு தடவை ... பிரதம மந்திரியை பார்ப்பேன்.. பிரதம மந்திரியின் ....திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று கூறினார் .... நல்ல துவக்கமாக இருக்கிறது ... தீய சக்திகள் அணுகாது காஷ்யப முனிவர் அருள்வாராக ...


Ramesh Sargam
அக் 18, 2024 19:58

பதவி ஏற்றவுடன் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார் இந்த பூப்போட்ட தொப்பிக்காரர்.


venugopal s
அக் 18, 2024 19:56

செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் தான், இருந்தாலும் அவர்களது உரிமையை கோரத்தானே வேண்டும்!


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 18, 2024 20:17

அடுத்து தனி நாடு வேண்டும் என்று தீர்மாணம் போடுவார்கள்....அது அவர்கள் உரிமை என்று விட்டுவிடுவோம்.....இந்திய ராணுவம் எங்கள் எல்லைக்குள் வரகூடாது என்று தீர்மானம் போடுவார்கள் அதையும் அவர்கள் உரிமை என்று விட்டுவிடுவோம்.... மத்திய அரசு செவிடன் போல இருக்கு அல்லவா ???


Duruvesan
அக் 18, 2024 20:19

மூர்கனுக்கு எரியுது போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை