உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன் கீ பாத் நிகழ்ச்சியால் அரசுக்கு ரூ.34 கோடி வருவாய்

மன் கீ பாத் நிகழ்ச்சியால் அரசுக்கு ரூ.34 கோடி வருவாய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: “பிர தமர் நரேந்திர மோடியின், 'மன் கீ பாத்' நிகழ்ச்சியால் அரசுக்கு, 34.13 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது,” என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார் . நாட்டின் பிரதமராக, நரேந்திர மோடி 2014ல் முதன்முறையாக பதவியேற்றார். அப்போது முதல், ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், 'மன் கீ பாத்' எனப்படும், 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம், அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றி வருகிறார். முதல் அத்தியாயம், 2014 அக்., 3ல் ஒலிபரப்பானது. இதுவரை, 124 அத்தியாயங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் அளித்த பதில்: கூடுதல் செல வு இல்லாமல், ஏற்க னவே உள்ள வளங்களை பயன்படுத்தி, அகில இந்திய வானொலியால், மன் கீ பாத் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. தேசிய மற்றும் பிராந்திய மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. மேலும், துார்தர்ஷன் சேனல்களில் உள்ளூர் மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது. இது தவிர, டிஜிட்டல் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பார்வையாளர்களை சென்றடைகிறது. மன் கீ பாத் நிகழ்ச்சி துவங்கப்பட்டதில் இதுவரை, 34.13 கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி