உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடி வாங்கிய அதிகாரிகளுக்கு கவர்னர் ஆறுதல்

அடி வாங்கிய அதிகாரிகளுக்கு கவர்னர் ஆறுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்., தொண்டர்களால் தாக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளை கவர்னர் அனந்த போஸ் மருத்துவமனையில் சென்று ஆறுதல் கூறினார்.மேற்கவங்கத்தில் ஆளும் திரிணாமுல்காங்., கட்சி அமைச்சர் ஜோதிப்ரியோ மாலிக், 65. முன்னர் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, ரேஷன் வினியோகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான, 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் தொடர்புடைய திரிணமுல் காங்., பிரமுகர் ஷேக் ஷாஜஹான் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்த சென்ற போது கட்சி தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். வாகனங்கள் சேதமடைந்தன. அதிகாரி ஒருவரின் மண்டை உடைந்தது.இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்து கோல்கட்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கவர்னர் அனந்தபோஸ் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அதிகாரிகளுக்கு கவர்னர் ஆறுதல்

இது தொடர்பாக கவர்னர் அனந்த போஸ் கூறியது, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணமுல் காங்., கட்சியினர் தாக்குதல் நடத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாது; இது ஒரு மோசமான முன் உதாரணம். இந்த விஷயத்தில் சட்டத்துக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதை கண்டிப்பாக எடுப்பேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

N DHANDAPANI
ஜன 06, 2024 11:44

சட்டத்தை மதித்து நடக்குமளவுக்கு காவலர்கள் கடுமையாக நடக்க வேண்டியது தான். ஜனநாயகத்தில் இந்த மாதிரியான அடிதடி அரசியலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


Devan
ஜன 06, 2024 07:50

இது போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சர்வாதிகாரிகளை உதைத்து உள்ளே தள்ளினால் எல்லாம் சரியாகிவிடும். பாரதத்தில் ஒன்றே சட்டம். ஏற்க முடியாதவர்கள் வெளியேறலாம். இங்கு சுருட்டிய சொத்துக்களை விட்டுவிட்டு.


THAMIRAMUM PAYANPADUM
ஜன 06, 2024 09:27

எட் இப்போ சட்டத்திற்கு புறம்பாக எதிர்கட்சிகளை மட்டும் தாக்குவதை நிறுத்தி எல்லோருக்கும் பொதுவான நீதித்துறைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எல்லோரையும் விசாரித்து பாரபட்சமில்லாமல் உடேனி வலக்கை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் அதில்லாமல் வெறும் ரைட் ரைட் என்று சேலம் விசாயிகள் மேல் தாக்குதல் நடத்தினால் இது போன்ற சம்பவங்களில் முதலில் நடக்காமல் இப்போது நடக்க துவங்கியிருக்கிறது


THAMIRAMUM PAYANPADUM
ஜன 06, 2024 09:28

சட்டத்திற்கு புறம்பாக எதிர்கட்சிகளை மட்டும் தாக்குவதை நிறுத்தி எல்லோருக்கும் பொதுவான நீதி...


Ramesh Sargam
ஜன 06, 2024 06:05

அராஜக மமதா ஆட்சி, உடனே கலைக்கப்படவேண்டும்.


நரேந்திர பாரதி
ஜன 06, 2024 03:51

"15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் தொடர்புடைய திரிணமுல் காங்., பிரமுகர் ஷேக் ஷாஜஹான் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்த சென்ற போது கட்சி தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். வாகனங்கள் சேதமடைந்தன. அதிகாரி ஒருவரின் மண்டை உடைந்தது."... திருட்டு திராவிடியா மாடல் இந்தியா முழுவதும் பரவி விட்டதோ?


Senthoora
ஜன 06, 2024 06:02

இதைத்தானே இப்போ காவிகளும் செய்கிறார்கள்.


vaiko
ஜன 06, 2024 01:19

அமலாக்க துறை அதிகாரிகள், அதிகாரிகள் மாதிரி செயல்படாமல், ஒன்றிய அரசின் அடியாட்கள் மாதிரி செயல்பட்டால் அடி, இடி மாதிரி விழும். நல்ல வேலை முதுகு தோலை உரிக்காமல் விட்டார்களாலே. அதுவரை சந்தோச படவேண்டும்.


Venkatesan.v
ஜன 06, 2024 00:35

Luckily it didn't go up to this stage in TN


Sathyasekaren Sathyanarayanana
ஜன 06, 2024 00:27

பாதுகாப்பிற்கு சென்ற துணை ராணுவ படையினர், துப்பாக்கி எதற்க்காக வைத்து இருந்தனர்? அலங்காரத்திற்க்காகவா? உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது கூட துப்பாக்கியை பண்படுத்தாத்தது ஏன்? சுடக்கூடாது என்று ஏதும் உத்தரவு இருந்ததா?


sahayadhas
ஜன 05, 2024 23:06

ஏவியது ஒருவன் கட்டிகிட்டது மற்றவன்.


S SRINIVASAN
ஜன 05, 2024 22:50

this is precedence to all state, govt of india shd intervene and take appropriate action


sankaranarayanan
ஜன 05, 2024 22:34

மத்திய புலனாய்வு சட்டம் சரியாக அமலாக்கப்படாததால்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் நாட்டில் பல இடங்களில் அடி உதை வாங்க நேரிடுகிறது உச்ச நீதிமன்றம் இனியாவது வேடிக்கை பார்க்காமல் தானாகவே முன் வந்து தக்க நடவடிக்கை எடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு நாட்டில் பராமரிக்கப்படும் இல்லையேல் கட்டுக்கடந்தாத ரணகளமாக மாறிவிடும் பின் வருந்தி பயனில்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை