உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ப்பு நாயின் புத்திசாலித்தனம்: சிறுத்தையிடம் உயிர் தப்பிய மக்கள்: நடந்தது என்ன?

வளர்ப்பு நாயின் புத்திசாலித்தனம்: சிறுத்தையிடம் உயிர் தப்பிய மக்கள்: நடந்தது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லாரி: வளர்ப்பு நாயால், கிரேனஹள்ளி கிராமத்தினர், சிறுத்தையிடம் இருந்து உயிர் தப்பினர்.கர்நாடகா மாநிலம், பல்லாரி சன்டூரின் சோரநுார் பேரூராட்சிக்கு உட்பட்ட கிரேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஹொன்னுார சாமி. இவர் கிராமத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார். இவரது வளர்ப்பு நாய், பண்ணை முன் திண்ணையில் படுத்திருந்தது. அங்கு வந்த சிறுத்தை, நாயை பிடிக்க முயற்சித்தது. உஷாரான நாய், சிறுத்தையிடம் இருந்து தப்பி, மின்னல் வேகத்தில், கிராமத்துக்குள் ஓடி வீட்டுக்கு வந்தது.எப்போதும் வீட்டுக்கு வராத நாய், இன்று இவ்வளவு வேகமாக ஓடி வந்ததை பார்த்து, ஹொன்னுார சாமி, ஆச்சரியமடைந்தார். பண்ணையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கிராமத்தினரிடம் விஷயத்தை கூறி, பண்ணைக்கு சென்றபோது சிறுத்தையை காணவில்லை. பண்ணையில் இருந்த ஆடுகள், கிடாக்கள், எருமைகளை தாக்கவில்லை. சிறுத்தை நடமாட்டம் குறித்து, கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஊழியர்களும் கூண்டு வைக்க ஏற்பாடு செய்து உள்ளனர். வளர்ப்பு நாயின் எச்சரிக்கையால், கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்தது தெரிந்தது. மக்கள் உஷாராகினர். இல்லையென்றால் சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

theruvasagan
ஜூலை 10, 2024 09:06

அந்த சிறுத்தை கிட்ட ஓவரா ஆடுனா காசு கட் அப்படின்னு ஒருத்தர் சொல்லச் சொன்னார்ன்னு சொன்னா அடங்கி ஒடுங்கி வாலை சுருட்டிக்கொண்டு ஓடிப் போயிடும்.


Bala
ஜூலை 10, 2024 01:34

குருமாவை அழைத்து உறவைக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னால் பிரச்சனை முடிந்து விடும்.


sugumar s
ஜூலை 10, 2024 12:09

அவர் விடுதலை சிறுத்தை ஆயிற்றே


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 21:36

பின்ன, டீம்கா கொத்தடிமை மாதிரி நினைச்சுட்டீங்களா ????


சிவ.இளங்கோவன் .
ஜூலை 10, 2024 00:57

வெந்து புழுங்கியே சாவுங்கள் ..எதுக்கெடுத்தாளும் திமுகவை இணைத்துக்கொண்டே இருக்கவேண்டும் .. ஹா ஹா ..


S Hariharasubramanian
ஜூலை 09, 2024 21:04

நாயின் நன்றி மிக பெரியது . அது மனிதர்ஹளுக்கு வராது .


canchi ravi
ஜூலை 09, 2024 19:38

அற்புதம்


suthan
ஜூலை 09, 2024 18:54

BA padicha naaya irukkum


Venkatesh
ஜூலை 09, 2024 19:45

பிஏ படிச்சவனெல்லாம் நாய் ன்னு சொன்னா.... திராவிட மாடல் திருடனுங்க பன்னிங்க....


KRISHNAN R
ஜூலை 09, 2024 18:52

நாம் தான் நாய்களை தவறாக நினைத்தோம். ஒரு தீர்க்கதரிசி... பட்டம் கொடுத்தார். ..


Velan
ஜூலை 09, 2024 18:36

கண்ணதாசன் பாடல் மெய்பிக்கபட்டுள்ளது


Ramesh Sargam
ஜூலை 09, 2024 18:02

நாய், நன்றியுள்ள பிராணி என்று சும்மாவா சொல்கிறார்கள்.


Balaji Radhakrishnan
ஜூலை 09, 2024 17:42

இனி யாரை திட்டினால் என்ன


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ