உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அர்த்தம் மாறியது அரசியல்: ஆதங்கப்படுகிறார் கட்கரி!

அர்த்தம் மாறியது அரசியல்: ஆதங்கப்படுகிறார் கட்கரி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அவுரங்காபாத்: ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை கட்டமைத்தல், வளர்ச்சி என அர்த்தம் இருந்தது. இப்போது அரசியல் என்றால் அதிகார அரசியல் என அர்த்தமே மாறி விட்டது,'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனைப்பட்டார்.மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் நகரில் ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவு பகடேவுக்கு நடந்த பாராட்டு விழாவில் நிதின் கட்கரி பேசியதாவது: முன்பெல்லாம் அரசியல் என்றால், சமூக சேவை, நாட்டை கட்டமைத்தல், வளர்ச்சி என அர்த்தம் இருந்தது. இப்போது அரசியல் என்றாலே அதிகார அரசியல் தான் என அர்த்தமாகி விட்டது.ஆரம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பணியாற்றிய போது பல தடைகளை எதிர்கொண்டோம். அப்போது அங்கீகாரம் இருக்காது. எங்களது பேரணி மீது கற்களை வீசி தாக்குவர். அவசர நிலை காலத்திற்கு முன்பு நாங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்திய ஆட்டோ ரிக்சாவிற்கு தீவைத்தனர்.தற்போது ஆயிரக்ணக்கான மக்கள் எங்களது பேச்சை கவனிக்கின்றனர். இந்த புகழுக்கு நான் மட்டும் காரணம் இல்லை. ஹரிபாவு போன்ற தொண்டர்கள் தான் காரணம். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கட்சியில் இருந்து எதுவும் கிடைக்காத நிலையிலும், நன்றாக உழைப்பவரே சிறந்த கட்சி தொண்டர். இவ்வாறு கட்கரி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
செப் 27, 2024 20:46

இப்போது அரசியல் என்றால் அதிகார அரசியல் என அர்த்தமே மாறி விட்டது. மிகவும் உண்மையான கருத்து. மறுப்பதற்கில்லை. இப்போது அரசியலுக்கு வந்த பிறகு, அரசியல் வியாதிகள் தங்கள் எண்ணம்போல ஆடுவது, ஆட்டைபோடுவது, ஆணவத்தால் துள்ளிகுதிப்பது என்று அக்கிரமத்தில் ஈடுபடுகிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள், ஒரு சிலரைவிட்டு. வாக்களிக்கும் மக்களின் கையில் உள்ளது இவர்களை திருத்துவது. ஆனால் துரதிருஷ்டம் மக்கள் இன்று அந்த அரசியல்வாதிகள் வீசி இறைக்கும் இலவசங்களை பொறுக்கிக்கொண்டு அப்படிப்பட்ட மோசமான அரசியல்வாதிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.


கிஜன்
செப் 27, 2024 20:33

ஊர் பக்கம் சொல்லுவாங்க சார் ..... நண்டு கொழுத்தா வலை ல தங்காதுன்னு ....


ராஜவேலு
செப் 27, 2024 19:59

சபாஷ். முன்பெல்லாம் அரசியல் நல்லா இருந்திச்சாம். இப்போ கெட்டுப் போச்சாம். முன்பு யாரோட ஆட்சி? இப்போ யாரோட ஆட்சி கோவாலு?


SUBBU,MADURAI
செப் 27, 2024 19:21

பிரதமர் மோடியும் RSS பிரச்சாகராக இருந்து தன் வாழ்க்கையை தொடங்கிய ஒரு சாதாரண அடிமட்ட தொண்டர்தான் என்பதை கட்கரி நினைவில் வைத்து கொண்டு இது போன்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.அவருடைய பெருந்தன்மையினால் தான் கட்கரி இன்று முக்கியமான துறைகளுக்கு அமைச்சர் பொறுப்பு வகிக்கிறார் என்பதை மனதில் இருத்திக் கொண்டு பேச வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை