உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு: பிரதமர் மோடி உரை

இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு: பிரதமர் மோடி உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ 2047 ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் நோக்கமாக உள்ளது. இதனை நிறைவேற்றுவதில், மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கலாம்'', என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் தலைமை

நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிடி ஆயோக் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் கொள்கைகளை இந்த அமைப்பு வடிவமைக்கிறது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5v5fxogv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை

இக்கூட்டதில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக பிஹார் சார்பில், துணை முதல்வர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா கலந்து கொண்டனர். பிஹாரைச் சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்கள் நிடி ஆயோக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

9வது கூட்டம்

நிடி ஆயோக் கூட்டம், டில்லியில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடந்தது. 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும், திட்டங்களை வழங்குவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டு இந்த கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ., மற்றும் அக்கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியர்களின் நோக்கம்

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக நிடி ஆயோக் ‛ எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 2047 ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் நோக்கம் ஆக உள்ளது. இந்த இலக்கை நிறைவேற்ற, மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் முக்கிய பங்காற்றலாம்.

இளைஞர்கள் நிறைந்த நாடு

நாம் சரியான திசையில் செல்கிறோம். நூறாண்டுகளுக்கு ஒரு முறை வரும் தொற்று நோயை தோற்கடித்தோம். நமது மக்கள் முழு உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் உள்ளனர். மாநிலங்களுடன் இணைந்து முயற்சி செய்து, 2047 ல் வளர்ந்த பாராதம் என்ற நோக்கத்தை நிறைவேற்றுவோம். வளர்ந்த மாநிலங்கள், வளர்ந்த இந்தியாவை உருவாக்கும். இளைஞர்கள் நிறைந்த நாடு இந்தியா. நமது பணியாளர்கள் திறன் காரணமாக, இந்தியா உலகத்திற்கு பெரிய ஈர்ப்பாக உள்ளது. நமது இளைஞர்கள், திறமையான மற்றும் வேலைவாய்ப்பு உள்ள பணியாளர்களாக மாற்றுவதை நாம் இலக்காக கொள்ள வேண்டும். திறன், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் வேலை சார்ந்த அறிவு ஆகியவை வளர்ந்த இந்தியாவுக்கு முக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.

புறக்கணிப்பு

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ் ஆளும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் ஆகியோர் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். டில்லி அரசும், இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளது.

நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை

இக்கூட்டதில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக பிஹார் சார்பில், துணை முதல்வர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா கலந்து கொண்டனர். பிஹாரைச் சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்கள் நிடி ஆயோக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Easwar Kamal
ஜூலை 27, 2024 18:37

அப்படியே வளர்த்துவிடுற போறீங்க. குஜராத்துக்கு மேல எந்த மாநிலம் மேல வராம கங்கணம் கட்டிக்கிட்டு வேலை பார்த்த எங்க இந்தியா உருப்படும். அதுலேயும் குறிப்பா அந்த ரெண்டு மாநிலத்துக்கு அள்ளி கொடுத்தது மிச்ச மாநிலங்கள் எல்லாம் கண்டு கொள்ளாமலே போவது. இது எல்லாம் அழகா?


venugopal s
ஜூலை 27, 2024 18:22

மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தியா முன்னேறிய நாடாக ஆகாது !


Swaminathan L
ஜூலை 27, 2024 16:51

பெரும்பாலான மக்களுக்கு அன்றாட வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கை பற்றிய பிரச்சினைகள், சிக்கல்கள்.. அவர்களுக்கு இந்தியா எவ்வகையில் வளரும் நாடு என்று கூடத் தெரியாது. அரசு நிர்வாகம் தீர்மானிக்கலாம் 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்று. அது பற்றி எவ்வித அறிதலும் புரிதலும் இல்லாத பெரும்பான்மையினர் எந்த விதத்தில் அவர்கள் பங்களிப்பைத் தர முடியும்? அரசின் நோக்கங்கள், இலக்குகள் பற்றிய புரிதல், தெளிவு மற்றும் பங்களிப்புச் செய்வதில் ஆர்வம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் பெற அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 27, 2024 14:33

நிதி வேண்டுவோர் அங்கு சென்றிருப்பார்கள். செல்லாதவர்கள் நிதி வேண்டாம் என்று சொன்னதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மெட்ரோ திட்டங்களுக்கு நிதி இல்லை என்பவர்களுக்கு திட்டத்துக்கான மதிப்பீடுகளை கொடுக்கவேண்டும் என்பது கூடவா தெரியாது? திறமையற்றவர்களை ஆட்சிப்பீடத்தில் ஏற்றி வைத்தது தமிழன் செய்த ஹிமாலயதவறு.


K.n. Dhasarathan
ஜூலை 27, 2024 13:57

எதற்கு இந்த கூட்டம், புயல் வெள்ளம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய குழு வந்தது, நிர்மலா வந்தார், உள்துறை அமைச்சர் சொன்னார், ஆனால் காசு மட்டும் வரலை, மாநில அரசு என்ன கேட்டாலும், குழு பரிந்துரைத்ததை காட்ட வேண்டியதுதானே ? இவ்வளவுதான் சேத மதிப்பு, இவ்வளவுதான் தர முடியும், என்று சொல்ல வேண்டியதுதானே, ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை ? நிதி அமைச்சர் ஏன் வாயை திறக்கவில்லை ? இவர்கள் எதோ மகாராஜாக்கள் போலவும், மாநிலங்கள் பிட்சை கேட்பது போலவும் நடப்பது ஏன் ? இவர்கள் தான் மாநிலங்களில் வரி என்னும் பெயரில் மகா சுரண்டல் செய்து, சரியாக சொன்னால் கொள்ளை அடித்து, தமிழக மக்களை வஞ்சிக்கிறார்கள், மக்கள் சாபம் சும்மா விடாது.


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 14:55

கொடுப்பதெல்லாம் பேக்கேஜ் போட்டு மகன் மருமகன் பாக்கெட்டுக்கு போகலாம்.


Sridhar
ஜூலை 27, 2024 13:13

இந்த கூட்டத்தில் பங்குபெறும் மாநிலங்களுக்குத்தான் மத்திய நிதிகளில் முன்னுரிமைன்னு சொல்லிரனும். அப்புறம் பாருங்க லபோதிபோன்னு அடிச்சிக்குவானுங்க இந்தி கூட்டணி ஆளுங்க நிஜமாலுமே, இந்த மாதிரி கூட்டங்களில் பங்கு பெற்று அவரவர் மாநிலங்களின் முன்னேற்ற திட்டங்களை விவரித்து அதற்கான நிதி ஒதுக்கீடுகளை கோராத பொறுப்பற்ற முதல்வர்கள் கொண்ட மாநிலங்கள் ஒதுக்கப்பட்டால்தான், வளர்ச்சி இல்லாமல் தவிக்கும்போது சம்பந்தபட்ட மாநில மக்களுக்கு உரைக்கும்.


Indian
ஜூலை 27, 2024 13:36

நீ பிஹாரி தானே , அப்படி தான் எழுதுவே .


Ashanmugam
ஜூலை 27, 2024 12:59

இந்திய மக்கள் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளவேண்டும். அது என்ன வென்றால் இந்திய ப்ளாக் கூட்டணியில் உள்ள கட்சி மாநில முதல்வர்கள் கேட்கும் நிதியை அப்படியே ஒரு பைசா கூட குறைக்காமல் கொடுக்கவேண்டும் இல்லாவிடில் தர்ணா, வெளி நடப்பு, ஆர்பாட்டம், போராட்டம். இதே தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் 1000ரூ கொடுப்பதற்கு ஆயிரம் யோசனை? ஆனால் 36000 கோடி நிதி கொடுக்க மோடிஜி அரசு 36000 முறை யோசிக்க வேண்டும். நம் கண்ணுக்கு தெரிந்து 1000 செலவு செய்து லட்ச ரூபாய் கேட்டால் தருவாங்களா? அதனால், மத்திய அரசு 297 கோடி கொடுத்தது நியாயம். தவிர 36000 கோடி நிதி தமிழகத்திற்கு கொடுத்தால் அந்த நிதியை 2026 தேர்தலில் ஓட்டுக்கு 5000 என பணத்தை வாரி இறைத்து மீண்டும் 234/234 என எல்லா தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஸ்டாலின் சிம்ம சொப்பணத்தில் அமர்வார். அவர் மகன் துணை முதல்வராவார். அதற்குதான் அவ்வளவு கோடி நிதி. உண்மையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அலசி ஆராய்ந்து பட்ஜெட் போட்டால் 36000கோடி தமிழகத்திற்கு வருமா? மேலும், கடந்த காலத்தில் ஊரை சூறையாடும் அளவிற்கு தமிழகத்தில் வெளி நாடுகளை போல புயல்கள் உருவாக வில்லை? ஆகவே, மத்திய அரசு அளித்த 297 கோடி போதுமானது. மேலும் மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி ஒதுக்கும்போது, ஆடிட் தணிக்கை செய்து கணக்கு பார்க்கவேண்டும். அவ்வாறு பார்ப்பதில்லை. இதனால் மத்திய அரசு நிதி பணம் தவறாக மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன. இதை தட்டி கேட்டால் வெளிநடப்பு, போராட்டம், உருட்டல் மிரட்டல் ஆட்சி கவிழ்ப்பு ஆகிய துஷ்பிரயோக செயல்களுக்கு இந்திய ப்ளாக் கூட்டணி எப்போதும் பார்லிமென்டில் சபையை நடத்த விடாமல் வீணாக புறக்கணிக்கிறது இந்திய மக்களே பாரீர் இவர்களின் கூத்தை? இனியாவது மெஜாரிட்டி அரசுக்கு ஓட்டு போடுங்க. ஏனெனில் கூட்டணி ஆட்சி எப்போதும் " நித்திய கண்டம் பூர்ண ஆயுசு" என்ற கதைதான்.


venugopal s
ஜூலை 27, 2024 12:55

அவர்களே ஆடி அவர்களே ஒருவரை ஒருவர் மெச்சிக் கொள்வார்கள்!


hari
ஜூலை 27, 2024 13:41

ஓசியா வந்த துணை முதல்வர் பதவி போல.. அப்படித்தானே வேணுகோபால்


Indian
ஜூலை 27, 2024 12:33

பயனற்ற , நேரம் விரயம் செய்யும் கூட்டம் ..பிஹாருக்கும் , குஜராத் கும் தான் பயன் ..


Jay
ஜூலை 27, 2024 12:19

மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டிற்கு தேவையானதை கேட்டு பெற இது போன்ற கூட்டங்கள் மிக தேவையானதாக இருக்கும். அரசியல் காரணத்திற்காக இது போன்ற முக்கியமான கூட்டங்களை புறக்கணித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை எடுத்து செல்லாதது மிக வருத்தமான விஷயம். முத்ரா யோஜனா கடன் திட்டத்தில் இந்தியாவில் அதிக அளவில் லோன் வாங்கப்படுவது தமிழ்நாட்டில் தான். இந்த கடன் அளவை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தியது தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய லாபம். அதே போன்று CSR திட்டத்தில் மாணவர்களை திறன் மேம்பாடு செய்வது தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பயனை கொடுக்கும். இப்படியெல்லாம் தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொடுத்துள்ள இந்த பட்ஜெட்டை அரசியல் காரணமாக தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை என்று கூறுவது மிகவும் மொக்கையாக இருக்கிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை