உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழம் தின்ற குரங்கு படுத்து உறங்கியது; மடியில் இடம் தந்த சசி தரூர் மகிழ்ச்சி!

பழம் தின்ற குரங்கு படுத்து உறங்கியது; மடியில் இடம் தந்த சசி தரூர் மகிழ்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் எம்.பி., சசி தரூரின் மடியில் வந்து அமர்ந்து குரங்கு ஒன்று, வாழைப்பழத்தை சாப்பிட்டு, அவரது மடியிலேயே குட்டித் தூக்கம் போட்ட நிகழ்வு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான சசி தரூர், இன்று காலை வழக்கம் போல வீட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு குட்டி, உரிமையுடன் சசி தரூரின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. அவர் கொடுத்த பழத்தை சாப்பிட்டு விட்டு, அவரது மடியிலேயே தூங்கி விட்டது.அந்தப் போட்டோக்களை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், சில தகவல்களையும் பதிவிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இன்று காலை பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த குரங்கு ஒன்று என் மடியில் ஏறி அமர்ந்து கொண்டது. ரொம்ப பசியுடன் காணப்பட்ட அந்த குரங்கு, நாங்கள் கொடுத்த இரு வாழைப்பழங்களையும் சாப்பிட்டு முடித்தது. பின்பு, என்னுடைய மடியிலேயே தலைவைத்து தூங்கி விட்டது. இது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது. வனவிலங்குகள் மீது எப்போதுமே எனக்கு மதிப்புண்டு. இருந்தாலும், குரங்கு கடித்தால் ரேபிஸ் ஊசி போட வேண்டியது வருமே, என்ற அச்ச உணர்வு என்னுள் இருந்து கொண்டே தான் இருந்தது. எனவே, பொறுமையாக இருந்து, அமைதியான முறையில் வரவேற்று, குரங்கிடம் மென்மையாக நடந்து கொண்டேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

samvijayv
டிச 05, 2024 17:26

சரியாக உற்று கவனித்து பாருங்கள் அது உங்ககளின் மனைவியாக இருக்க போகின்றார்.., சுனந்தா புஷ்கர்.


Priyan Vadanad
டிச 04, 2024 22:33

இங்கு கருத்து பதிவிட்ட அனைவரும் எந்த அளவுக்கு கேவலமான மனநிலையை கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. / தான் யோக்கியன் என்று மார்தட்டும் இவர்களும், இவர்களை சார்ந்தோரும், யாரை ரோல் மாடலாக கொண்டுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டு காட்டும் இந்த பதிவுகளுக்கு நன்றி.


Rajamani K
டிச 04, 2024 21:00

அது பெண் குரங்கா ஆன் குரங்கா? உறங்க இடம் கொடுத்துள்ளாரே என்பதால் கேட்டேன்.????


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 20:08

நட்புக்கொண்டவர் ....


Perumal Pillai
டிச 04, 2024 19:50

பெண் குரங்கு ?


ஆரூர் ரங்
டிச 04, 2024 18:41

பெண் குரங்கா?


கட்டத்தேவன்,,திருச்சுழி
டிச 04, 2024 19:00

அப்புராணி மனுஷன்னு நெனச்சா சரியான குசும்பு புடிச்ச ஆளா இருப்பீங்க போலயே?


வாய்மையே வெல்லும்
டிச 04, 2024 18:39

பெண்களை போலவே நீங்க குரங்கிடமும் மேன்மையை கடைபிடிப்பேர் என அறிந்த விலங்கு , சற்று உங்கள் மடியில் இளைப்பாறியது ...ஆச்சரியம் தான்


RAMAKRISHNAN NATESAN
டிச 04, 2024 18:27

மடியில் வந்து அமர்ந்து குரங்கு ஒன்று, வாழைப்பழத்தை சாப்பிட்டு, ........ அவரது மக்களவை நட்புக்களைக் கவனித்தால் அப்பலேர்ந்தே இப்படித்தானா ன்னு கேட்கத்தோணுது .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை