உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நினைவுச்சின்னமாகும் ஓங்கல்லுார் மஞ்சுளால் தளி மகாதேவர் கோவில்

நினைவுச்சின்னமாகும் ஓங்கல்லுார் மஞ்சுளால் தளி மகாதேவர் கோவில்

பாலக்காடு; பாலக்காடு அருகே உள்ள, ஓங்கல்லுார் மஞ்சுளால் தளி மகாதேவர் கோவிலை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி அருகே உள்ளது ஓங்கல்லுார் மஞ்சுளால் தளி மகாதேவர் கோவில். சுமார் 2,000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 1958ல் அமலுக்கு வந்த, பண்டைய நினைவுச்சின்னங்கள் சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இக்கோவிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, யாருக்காவது எதிர்ப்பு இருந்தால், இரண்டு மாதத்திற்குள் தொல்லியல் துறையிடம் தெரிவிக்க வேண்டும்.இக்கோவிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படும் என்று, இரு வாரங்களுக்கு முன், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்திருந்தார்.கோவில் அறக்கட்டளை வாரியம் மற்றும் கோயில் நிர்வாக குழுவின் கோரிக்கையை ஏற்று, மத்திய கலாசார அமைச்சகம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை