மேலும் செய்திகள்
மர்ம நபர்கள் நடமாட்டம் தப்பி ஓடியவர்களுக்கு வலை
14-Sep-2024
ஷிவமொக்கா : ஷிவமொக்கா சொரபாவில் வீடு ஒன்றின் முன் பகுதியில் பசுமாடு நின்றிருந்தது. நேற்று முன் தினம் நள்ளிரவு, பார்ச்சூனர் காரில் அங்கு வந்த மர்ம நபர்கள், பசுவை காரில் ஏற்றினர்.இதை பார்த்த அப்பகுதியினர், காரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் மர்மநபர்கள், அவர்கள் மீது காரை ஏற்ற முயற்சித்தனர். மக்கள், உயிர் பயத்தில் விலகி பின் வாங்கினர். குரங்கு குல்லா அணிந்திருந்த மர்ம நபர்கள் காரில் தப்பிவிட்டனர். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.இது தொடர்பாக, சொரபா போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் அங்கு வந்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.சொரபாவில் சமீப நாட்களாக, பசுக்கள் திருட்டு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர். அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
14-Sep-2024