உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தானாக பதவி விலகுவதுதான் ஒரே வழி: நீதிபதி வர்மாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

தானாக பதவி விலகுவதுதான் ஒரே வழி: நீதிபதி வர்மாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பண மூட்டை சிக்கிய விவகாரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விசாரணை குழுவை அமைத்துள்ளார். எனவே, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை பெற வேண்டுமெனில், யஷ்வந்த் வர்மா, அவராகவே தன் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. உள் விசாரணை குழு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது, அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும்போது பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து விசாரிக்க, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, உள் விசாரணை குழுவை அமைத்தார். இக்குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், 'நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்கலாம்' என ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை எதிர்த்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை, சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, பார்லிமென்டில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. லோக்சபா நேற்று முன்தினம் கூடியபோது, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி 146 எம்.பி.,க்களிடம் இருந்து வந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஒப்புதல் தேவையில்லை மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவையும் சபாநாயகர் அமைத்தார். இதனால், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பார்லிமென்ட் நடவடிக்கை எடுப்பதற்கு முன், தானாகவே பதவியை அவர் ராஜினாமா செய்தால் மட்டுமே ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் பிற பலன்களை பெற முடியும். ஒருவேளை பார்லிமென்ட் மூலம் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதியம் உள்பட எந்தவொரு சலுகையும் அவருக்கு கிடைக்காது என கூறப்படுகிறது. அரசியல்சாசன பிரிவு 217ன் படி ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி அவராகவே தன் கைப்பட ராஜினாமா கடிதம் எழுதி, ஜனாதிபதிக்கு அனுப்பினாலே அது ஏற்றுக் கொள்ளப்படும். அதற்கு எந்த ஒப்புதலும் தேவையில்லை என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 14, 2025 10:01

இவரிடமிருந்து பண மூட்டைகள் கண்டெக்கப்பட்டதற்கு பின்னர் மத்திய அரசுக்கு எதிராகவே பல வழக்குகளில் தீர்ப்புகள் வந்துள்ளது யுவர் ஆனர். குறிப்பாக தமிழக அமலாக்க துறை வழக்குகளில் தீர்ப்புகள் அமலாக்க துறைக்கு எதிராகவே வந்துள்ளது. ஆகவே இந்த மூட்டை பணம் எல்லாம் இவருக்கு மட்டும் சொந்தமாக இருக்க வாய்ப்பு இல்லை. மற்ற நீதிபதிகளுக்கும் அதில் பங்கு இருக்கலாம். ஆகவே ரா உளவு அமைப்பு இது சம்பந்தமாக விசாரிக்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் காட்டும் அக்கறை இந்த நீதிபதி பதவி நீக்கம் செய்வதில் இல்லையே. ஏன். இந்த நீதிபதியும் குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல் பதவி விலகாமல் வழக்கு தொடுத்தது கொண்டு இருப்பது பார்த்தால் பல நீதிபதிகளுக்கு இதில் பங்கு உள்ளது போல் தெரிகிறது. கலி காலம்.


அப்பாவி
ஆக 14, 2025 07:57

அவரோட தற்போதைய லக்னோ வீடு, பூர்வீக வீடுகளையும் சோதனை போடுங்க. நிறை பணம் கிடைக்க வாய்ப்பிருக்கு. அப்புறமா பதவி நீக்கம் பண்ணலாம்.


R.RAMACHANDRAN
ஆக 14, 2025 07:46

இந்த நாட்டில் கொடும் குற்றவாளிகளை அரசு அங்கங்களில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் அளிப்பது என்பது தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதை விட கொடுமையானது என்பதை உணரும் நாள் எந்நாளோ அன்றுதான் இந்தியா முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டது என்று பொருள்.


மொட்டை தாசன்...
ஆக 14, 2025 07:33

உயர் நீதிமன்ற நீதிபதியின் லட்சணம் இப்படிருக்கும்போது இவர்கள் தரும் தீர்ப்பு எப்படிருக்கும் என்பது வெட்டவெளிச்சம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை