உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டுப்பன்றி பிரச்னைக்கு ஒரே தீர்வு அடித்துக்கொன்று சாப்பிடுவது தான்: கேரள அமைச்சரின் அடடே யோசனை

காட்டுப்பன்றி பிரச்னைக்கு ஒரே தீர்வு அடித்துக்கொன்று சாப்பிடுவது தான்: கேரள அமைச்சரின் அடடே யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆலப்புழா: ''காட்டுப்பன்றிகள் வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. அவற்றை கொன்று, அதன் இறைச்சியை சாப்பிட அனுமதிப்பது தான், இந்த பிரச்னைக்கான ஒரே தீர்வு,'' என்று கேரள வேளாண் அமைச்சர் பி ரசாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. குறிப்பாக காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இ தனால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது. சமீபத்தில் வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் அடிக்கடி நடக்கும் மோதல்களை குறைக்க, பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இந்நிலையில், ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாநில வேளாண் அமைச்சர் பிரசாத் பேசியதாவது: மத்திய அரசின் தற்போதைய சட்டம் காட்டுப்பன்றியின் இறைச்சி சாப்பிடுவதை தடை செய்கிறது. விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கொன்று, அதன் இறைச்சியை சாப்பிட அனுமதித்தால், பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவது பெருமளவில் குறையும். இதன் வாயிலாக பயிர்களையும் விலங்குகளிடம் இருந்து காப்பாற்றலாம். காட்டுப்பன்றிகள் அரியவகை இனத்தை சேர்ந்தவையல்ல. எனவே காட்டுப்பன்றிகளை கொல்வதாலும், அதன் இறைச்சியை சாப்பிடுவதாலும் அதன் இனப் பெருக்கம் குறையாது. இவ்வாறு அவர் பேசினார். கா ட்டுப்பன்றிகளை கொல்ல வேண்டும் என்ற அமைச் சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி யுள் ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சண்முகம்
அக் 13, 2025 08:09

விட்டால் நாயையம் சாப்பிடுவீங்க.


saravana kumar
அக் 25, 2025 13:52

உண்மை. அற்ப பிறவி தானே ஆறு அறிவு மனிதன்


திகழ் ஓவியன், Ajax Ontario
அக் 13, 2025 08:03

இவாறு சொல்வது அங்கே பெரும்பான்மை யாக உள்ள குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானது...இவரின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


வாய்மையே வெல்லும்
அக் 13, 2025 05:43

கட்டுப்பாடின்றி நாய்க்கடி யால் வந்த அவதிக்கு.. கூடிய விரைவில் ரேபீஸ் வந்த நாயை சுவைக்க ஆசைப்படுகிறீர் போல.. என்னடா கடவுளின் தேசத்திற்கு வந்த தற்குறி சோதனை ?


Iyer
அக் 13, 2025 05:14

விலங்குகளுக்கு உணவு தரும் காடுகளை அழிப்பது - மனிதன் செய்யும் மாபெரும் கிரிமினல் குற்றம் ஆகும். மனிதன் செய்யும் குற்றத்துக்காக விலங்குகளை அடித்துக்கொன்று - விலங்குகளுக்கு தண்டனை கொடுப்பதா? சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தி - காடுகளை அழித்து - விலங்குகளின் FOOD SECURITY ஐ குலைத்த மனிதனை யார் தண்டிப்பார்?


Kasimani Baskaran
அக் 13, 2025 03:58

காடுகளை அழித்தால் வேறு என்ன நடக்கும்? புதிய காடுகளை உருவாக்க வேண்டும். இல்லை என்றால் பிரச்சினை பூதாகரமாக கிளம்பும்.


Manaimaran
அக் 13, 2025 02:43

சரியான முடிவு இதுதான் இதுல போயி என்ன அடடே ரூம்ல உங்காந்த தெரியாது வயல் காட்டில இரண்டு நாள் இருந்து பாத்த தெரியும் அமைச்சரின் யேசனை ஏற்க தக்கது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை