மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10
பெலகாவி, : காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை, கணவருக்கு அனுப்பி வைத்த, காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.பெலகாவி, கித்துார் நெசவாளர் காலனியின் முத்துராஜ் பசவராஜ் இடர்கி, 26. இவரும், எதிர் வீட்டில் வசிக்கும் 24 வயது இளம்பெண்ணும், கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்தனர். திருமணம் செய்வதாக கூறி, காதலியுடன், காதலன் அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளார். இதை வீடியோவும் எடுத்து உள்ளார். இருவரும் நெருக்கமாக, புகைப்படங்களும் எடுத்து உள்ளனர். இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பால், காதலியை திருமணம் செய்ய, முத்துராஜ் மறுத்து விட்டார். இதனால் பெற்றோர் கூறியபடி, வேறு ஒரு வாலிபரை, கடந்த 14ம் தேதி முத்துராஜின் காதலி திருமணம் செய்தார். ஆனால் காதலி தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோ, நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படத்தை, காதலியின் கணவருக்கு, முத்துராஜ் அனுப்பி வைத்தார்.இதனால் முத்துராஜின் காதலியை, கணவர் வீட்டில் இருந்து வெளியே அனுப்பினார். அவரை பெற்றோரும் வீட்டில் சேர்க்கவில்லை. இதையடுத்து, முத்துராஜ் மீது காதலி, கித்துார் போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை முத்துராஜ் வீட்டின் முன்பு, காதலி திடீரென போராட்டம் நடத்தினார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் அவரை ஏற்றுக்கொள்ள முத்துராஜிம், அவரது குடும்பத்தினரும் மறுத்தனர். மகளுக்கு ஆதரவாக பெற்றோர் களம் இறக்கினர்.இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையில், மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் செருப்பால் அடித்து தாக்கி கொண்டனர். இதுபற்றி அறிந்த கித்துார் போலீசார் அங்கு சென்று, முத்துராஜை கைது செய்தனர்.
3 hour(s) ago | 10