உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், 66, என்பவர் சமீபத்தில் கொல்லப்பட்டார்.இந்த கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலே காரணம் என்றும், ஏற்கனவே பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்ததால், அவரை சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியானது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதைத் தொடர்ந்து, சல்மான் கான் மற்றும் பாபா சித்திக் மகன் ஜிஷானுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 20 வயது இளைஞரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர், மும்பை போக்குவரத்து போலீசாரின் உதவி எண் வாயிலாக மிரட்டல் விடுத்தார். அதில், 'நடிகர் சல்மான் கான் எனக்கு 2 கோடி ரூபாய் அளிக்காவிட்டால், நான் அவரை கொலை செய்து விடுவேன்' என, குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த மும்பையின் பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த அசம் முகமது முஸ்தபா, 56, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
அக் 31, 2024 05:26

நாமளே கேடு கெட்ட கேடி நமக்கே நம்மகூடவே இருந்துட்டு நம்மதுட்டை ஆட்டைய போடும் மகா பெரியகேடி நம்ம இனத்தோடவன் என்கிறவிஷயத்தை நினைக்கயில சல்மான் காணுக்கே அழுவுறதா சிரிக்கிறதா என கன்பீஸ் ஆயிட்டாராம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை