உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக மீனவர் பிரச்னைக்கு மூலகாரணம்: பார்லியில் அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

தமிழக மீனவர் பிரச்னைக்கு மூலகாரணம்: பார்லியில் அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு கடந்த 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே மூலகாரணம்'', என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.மீனவர் பிரச்னை தொடர்பாக ராஜ்யசபாவில் அவர் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: நேற்று வரை இலங்கை சிறைகளில் 86 இந்திய மீனவர்கள் இருந்தனர். இன்று 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம் 97 பேர் அந்நாட்டு சிறையில் உள்ளனர். 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 3 பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர். தண்டனை அனுபவிப்பவர்களில் பலர் படகு உரிமையாளர்கள் அல்லது மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்தில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். இதனை கையாள்வது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.1974 ல் அப்போது மத்தியில் இருந்த அரசு, மாநில அரசுடன் ஆலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரையறுத்த போது தான் இந்த பிரச்னை துவங்கியது. பிறகு 1976 ல் மீன்பிடிப்பது தொடர்பாக எல்லை வரையறை தொடர்பான கடித பரிமாற்றம் நடந்தது. எனவே 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு மூல காரணமாக உள்ளது. இந்திய மீனவர் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

M Ramachandran
மார் 27, 2025 22:46

இது ராகுல் பாதி நம் அப்பா அல்ல அவுக்க அப்பா கம்பெனி யால் வந்தது என்கிறீர்கள்


Madhavan
மார் 27, 2025 22:41

ஐயா தாரை வார்ப்பது என்றால் என்ன? அது தமிழ் சொல்லா? வட மொழி சொல்லா? அல்லது தமிழர்களின் சடங்கு முறையா? அல்லது தாரை வார்ப்பது என்பது என்பது தோசை வார்ப்பது போலவா? திருப்பிப் போட இயலுமா? தெரிந்தால் பதில் அளியுங்கள்...


shan
மார் 27, 2025 22:21

ரொம்ப சரியாய் சொன்னீர்கள் கடத்தல் தான் முக்கிய கா ரணம்


தமிழ்வேள்
மார் 27, 2025 20:02

திராவிட இயக்க மீனவர்கள் நடத்தும் கள்ள கடத்தல் பிசினஸ் இன்னொரு முக்கியமான காரணம்...திமுக புள்ளிகளின் மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களின் உரிமத்தை ரத்து செய்துவிட்டால் பெரும்பாலும் மீனவர் பிரச்சினை வராது... கடற்கரை ஓர சர்ச் கும்பல் செய்யும் பிரச்சினை மிகவும் அதிகம்...... இவற்றை முதலில் தடுக்க வழி செய்வது நல்லது


ஆரூர் ரங்
மார் 27, 2025 20:00

உண்மையில் பாதிக்கப்படுவார்கள் பாவப்பட்ட இலங்கைத் தமிழ் மீனவர்கள்தான். இங்குள்ளவர்கள் பெரிய படகுகளில் எல்லைதாண்டி அங்குள்ள குஞ்சுமீன்களையும் பிடித்து விடுகிறார்கள் எனக்கூறும் வடயிலங்கை தமிழ் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதால் இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள்..போதைப்பொருள் கடத்தலும் இன்னொரு காரணம். கச்சத்தீவு காரணமல்ல .


GMM
மார் 27, 2025 19:56

மக்கள் பிரதிநிதிகள் ஆயுள் 5 ஆண்டுகள். அவர்கள் எப்படி ஒரு யுகம் ஒப்பந்தம் போடுகிறார்கள். ?75 ல் ஒப்பந்தம் என்றால் 80 வரை தானே ஆயுள். கவர்னர் 5 ஆண்டு வரை ஒப்புதல் கொடுத்து இருக்க வேண்டும். .நீதிமன்றம் பாதி விசாரணை, பாதி நேரம் சர்வாதிகாரம் சட்டங்களை நிறுத்த வேண்டும். நவாப் , பிரிட்டன் மக்கள் பிரதிநிதி கிடையாது. அவர்கள் 99 வருஷம் குத்தகை விடலாம். கட்சிகள் விட முடியுமா. ?.


अप्पावी
மார் 27, 2025 19:50

அவிங்க செஞ்சது அந்தக்காலத்துக்கு பொறுத்தமானவை. அப்போது 2000 மீனவர்கள் இருந்தாலே அதிகம். இன்னிக்கி 20000 மீனவர்கள் இருக்காங்க. கச்சத்தீவு நம் வசம் வந்திருந்தால் பல ஆயிரக்கணக்கான சதுரமீட்டர் கடல் பரப்பு இலங்கைக்குப் போயிருக்கும். இப்போ கிடைக்கிற மீன் கூட கிடைக்காது.


Sivakumar
மார் 27, 2025 19:40

ஆட்சி அதிகாரத்தில் 11 ஆண்டுகள்... இந்தப்புறமும் ஒரு பிரச்சனையை தீர்க்க முடிய வில்லை, 50 ஆண்டுகளுக்கு முன் ஆண்டவர்களைத்தான் பழிபோட்டு தப்பிக்க முடியும்னு சொல்றேங்க. புரியுது, புரியுது, நல்லாவே புரியுது


C.SRIRAM
மார் 27, 2025 20:42

கருத்து என்கிற பெயரில் உளற கூடாது . கச்சத்தீவு கொடுத்தது தான் . பதினோரு வருடங்களில் திரும்ப வாங்க முடியாது . மேலும் தமிழக மீனவர்களில் சிலர் மீண்டும் மீண்டும் எல்லை தாண்டுவது தவறு . அதை சொல்ல ஏன் யாருக்கும் துப்பு இல்லை ?. இவர்கள் எல்லை தாண்டுவது பற்றி இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் இந்திய அரசுக்கு புகார் அளித்திருக்கிறார்கள் . ஏன் ஒழுக்கம் இல்லை என்பதே கேள்வி ?


பேசும் தமிழன்
மார் 27, 2025 19:32

கான் கிராஸ் மற்றும் திமுக கட்சிகள் தான் அத்தனை பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்.


தாமரை மலர்கிறது
மார் 27, 2025 19:25

திருட்டு மீன் பிடித்து போதை பொருள் கடத்தும் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதை விட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை