உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது: மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது: மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

புதுடில்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்கும் நேரத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நிலவும் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது,'' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் கல்வியாளர் ஜாகூர் அஹமது மற்றும் சமூக ஆர்வலர் குர்ஷியாத் அஹமது மாலிக் வழக்கு தொடர்ந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cpk2eybr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்கள் தங்களது மனுவில், '' மாநில அந்தஸ்து வழங்குவதை தாமதம் செய்தால், மாநில அரசுக்கு பின்னடைவு ஏற்படும். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டசபை தேர்தல் நடந்தது. எனவே மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதற்கு பாதுகாப்பு சவால்கள், வன்முறை அல்லது வேறு எந்த இடையூறும் இல்லை. முன்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும்'', எனத் தெரிவித்து இருந்தனர்.இந்த மனு தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, '' மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், மாநிலத்தில் விசித்திரமான சூழ்நிலை நிலவுகிறது,'' என்றார். இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நிலவும் கள நிலவரத்தையும், பாதுகாப்பு சூழ்நிலைகளையும் புறக்கணிக்க முடியாது எனத் தெரிவித்ததுடன், இந்த மனு குறித்து எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ManiMurugan Murugan
ஆக 15, 2025 00:34

அருமை ஏற்கனவே அங்கிருக்கும் அரசியல் கட்சிகளின் கவனம் குறைவால் பல பிரச்சனைகள் சந்தித்து உள்ளோம் அமைச்சர் மகள் கடத்தல் அதெல்லாம் மறக்க முடியாது நிலைமை சீராக்கட்டும் பாதுகாப்பு கருதி யே யோ சித்தர் அவசியம்


GMM
ஆக 14, 2025 20:56

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து. தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் அல்லது வழங்க கூடாது எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் தனி நபர் கல்வியாளர் ஜாகூர் அஹமது மற்றும் சமூக ஆர்வலர் குர்ஷியாத் அஹமது மாலிக் வழக்கை இருவர் எப்படி தாக்கல் செய்ய முடியும்?


visu
ஆக 14, 2025 19:36

அதையும் நீதிமன்றமே கொடுத்து விடலாமே


Sree
ஆக 14, 2025 19:02

காஷ்மீரை நாசமாக்க துடிக்கிறார்கள்


ஆரூர் ரங்
ஆக 14, 2025 17:36

பயங்கரவாதிகளுக்கு நிதி வசூலித்த ஆள் அங்கு மக்கள் பிரதிநிதி. இப்படிப்பட்ட மாநிலத்திற்கு முழு அதிகாரம் அளிக்கும் மாநில அந்தஸ்து ஆபத்தானது.


Rajasekar Jayaraman
ஆக 14, 2025 16:43

அமெரிக்காவோடு சேர்ந்து நாட்டை அழிக்க எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து விட்டது போலிருக்கிறது பணம் வரும் போகும் ஆனால் கௌரவம்.


Rajasekar Jayaraman
ஆக 14, 2025 16:41

ஏன் அதை மட்டும் விடுவானே அதற்கும் மாநில அந்தஸ்து கொடுத்துவிடலாம் சுப்ரீம் கோர்ட்டில் நினைத்தால்.


Keshavan.J
ஆக 14, 2025 16:28

கல்வியாளர் ஜாகூர் அஹமது மற்றும் சமூக ஆர்வலர் குர்ஷியாத் அஹமது மாலிக் இவர்கள் இடம் இருக்கும் தீவிரவாதிகளுக்கு பணம் வேண்டும் அதனால் மாநில அந்தஸ்து வேண்டாம். ப்ளடி டெற்ரோரிஸ்ட்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை