உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாலிபரை மிரட்டி ரூ. 65 லட்சம் பறித்த அண்ணன், தம்பி கைது

வாலிபரை மிரட்டி ரூ. 65 லட்சம் பறித்த அண்ணன், தம்பி கைது

பெங்களூரு: நண்பனின் தனிப்பட்ட போட்டோக்கள், வெளியாவதாக ஏமாற்றி 65 லட்சம் ரூபாய் பறித்த, அண்ணன், தம்பி மீது வழக்கு பதிவாகிஉள்ளது.ஷிவமொகாவை சேர்ந்த மணிகண்டா, 27, பெங்களூரில் வசிக்கிறார். விதான்சவுதா சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில், மென் பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கு பரத், 32, அவரது தம்பி அக்ஷய்குமார், 30, ஆகியோர் நண்பர்கள்.சில மாதங்களுக்கு முன், மணிகண்டாவை சந்தித்த சகோதரர்கள், 'உன்னுடைய தனிப்பட்ட அந்தரங்கமான போட்டோக்களை, அடையாளம் தெரியாத ஒருவர், உன் மொபைல் போனில் இருந்து எடுத்துள்ளார். இதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக, எங்களிடம் கூறுகின்றனர். நீ அவருக்கு 12 லட்சம் ரூபாய் கொடுத்தால், போட்டோக்களை திரும்ப பெறலாம்' என கூறினர்.இதனால் பயந்த மணிகண்டா, 11.20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, அக்ஷய்குமாரிடம் கொடுத்தார். சில நாட்களுக்கு பின், மீண்டும் அந்நபர் பணம் கேட்பதாக கூறியதால், வேறு இடத்தில் 10 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தார். இதேபோன்று மிரட்டியதால், தன் தந்தையிடம் 4 லட்சம் ரூபாய், அக்காவிடம் 8 லட்சம் ரூபாய் வாங்கி, அக்ஷய் குமாரிடம் கொடுத்தார்.இதற்கிடையில், அக்ஷய்குமார், மணிகண்டாவின் அக்காவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'உங்கள் தம்பி பிரச்னையில் சிக்கியுள்ளார்' என பொய் சொல்லி 12 லட்சம் ரூபாயை தன் கணக்கில் போடும்படி செய்தார். இப்படி கட்டம், கட்டமாக 65 லட்சம் ரூபாய் பணம் பறித்தார்.இதேபோன்று நண்பர்கள், தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டதால், சந்தேகமடைந்த மணிகண்டா, விதான்சவுதா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்திய போது, மணிகண்டாவின் அப்பாவி குணத்தை பயன்படுத்தி, அக்ஷய் குமாரும், பரத்தும் பணம் பறித்தது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்