உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும்; பிரதமர் மோடி உத்தரவாதம்

இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும்; பிரதமர் மோடி உத்தரவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: வரும் ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ரூ.46,400 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த ஓராண்டில், ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக்கு முதல்வர் பஜன்லால் ஷர்மா மற்றும் அவரது குழுவினர் கடினமாக உழைத்துள்ளனர். ராஜஸ்தானில் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது. பா.ஜ., நல்லாட்சியின் அடையாளமாக மாறுகின்றன.கட்சி தனது தீர்மானங்களை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகளை மேற்கொள்கிறது. ராஜஸ்தானில் இன்று நடக்கும் நவீன வளர்ச்சிப் பணிகள் வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும். இது வளர்ச்சி அடைந்த மாநிலத்தை உருவாக்க உதவும். ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும் போது இந்தியாவும் வேகமாக வளரும். வரும் ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் அரசு வேகமாக செயல்படும்.கிராமங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த பா.ஜ., தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க மிகவும் முக்கியம். ராஜஸ்தானில் மின்சாரத் துறையில் பா.ஜ., அரசு பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதனால் நமது விவசாயிகள் அதிக பயன் பெறுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
டிச 17, 2024 19:30

ஏன் ராவுளு ப்ரியங்கா இரட்டை எஞ்ஜினாக சுறு சுறு என்று வேலை செய்யாதா


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 17, 2024 18:51

YES அதன் வேகம் தான் மணிப்பூரில் நாறி விட்டதே


T.sthivinayagam
டிச 17, 2024 15:51

மஹாராஷ்டிராவில இரட்டை என்ஜின் ஆட்சி தான் ஆனால் டிரைவர் ஐந்து எப்படி ஊர் போய் சேரும்


ghee
டிச 17, 2024 16:42

நிதி குடும்பமும் அப்படியேதான் சிவனாயகம்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 17, 2024 16:48

ஓஹோ இப்போது தான் புரிந்தது. இண்டி கூட்டணியில் பத்து டிரைவர்கள் உள்ளதால் தான் ஊர் போய் சேர முடியவில்லை. ஓகே ஓகே


Sampath Kumar
டிச 17, 2024 14:34

இரட்டை என்ஜினீ ?


N Sasikumar Yadhav
டிச 17, 2024 14:57

உங்க திருட்டு திராவிட மாடல் மாதிரியில்லை இரட்டை இன்ஜின் போட்டு கொள்ளையடிக்க . பாரதியஜனதா கட்சியின் இரட்டை இன்ஜின் என்பது மத்தியரசு கொடுக்கும் திட்டங்களை தடை சொல்லாமல் நிறைவேற்றுவது


veera
டிச 17, 2024 14:59

ஆமாம் டாஸ்மாக்கில் ரெண்டு கவுண்டர் இருக்கு சம்பத்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 17, 2024 15:43

இரட்டை இன்ஜின் முதலமைச்சர் - துணை முதலமைச்சர் - இரட்டை இன்ஜின் திராவிட மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை