தனிநபர் மற்றும் அரசியல் நலன்களுக்காக தேச நலனைப் புறக்கணிப்பது ஏற்புடையதல்ல. தேச நலனை முதன்மையாகக் கருதவில்லை என்றால், அரசியலில் ஏற்படும் கருத்து வேறுபாடு தேச விரோதமாகிவிடும். தேசத்தின் வளர்ச்சிக்காக, அது போன்றவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதிநீதி கிடைப்பதில் தாமதம்!
கோல்கட்டாவில் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில், நீதி தாமதமானது மிகுந்த மன வேதனையை தருகிறது. இது, தனிநபருக்கு எதிரான குற்றமல்ல. பெண் சமூகத்தின் கண்ணியத்தின் மீதான தாக்குதல்.ஹர்பஜன் சிங், ராஜ்யசபா எம்.பி., - ஆம் ஆத்மிபா.ஜ., சதி செய்கிறது!
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு பதிய கவர்னர் அனுமதியளித்திருப்பது பா.ஜ.,வின் சதி. காங்கிரஸ் அரசை பலவீனமாக்க இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது ஏராளமான ஊழல் புகார்கள் குவிந்தன. அவர் மீது வழக்கு பதிய கவர்னர் அனுமதிக்காதது ஏன்?அஜய் ராய், தலைவர், உத்தர பிரதேச காங்.,