உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்சி அமைக்க வியூகம் உள்ளது: ராகுல் பேட்டி

ஆட்சி அமைக்க வியூகம் உள்ளது: ராகுல் பேட்டி

புதுடில்லி: ‛‛ மத்தியில் ‛ இண்டியா ' கூட்டணி ஆட்சி அமைக்க எங்களிடம் வியூகம் உள்ளது'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ‛ இண்டியா ' கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனையடுத்து டில்லியில் நிருபர்களிடம் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, பிரியங்கா, ராகுல் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

மக்கள் தீர்ப்பு

அப்போது கார்கே கூறியதாவது: லோக்சபா தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளித்த முடிவு. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. நடந்து முடிந்த தேர்தல் என்பது மக்களுக்கும் மோடிக்கும் இடையே நடந்த தேர்தல். மோடிக்கு எதிராக மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர். மோடிக்கு பெரிய தோல்வி கிடைத்துள்ளது. தனது பெயரை மட்டும் சொல்லி ஓட்டுக் கேட்ட மோடிக்கு பின்னடைவு. மக்கள் தீர்ப்பை மனதார ஏற்கிறோம். எங்கள் வங்கிக்கணக்கை முடக்கினர். கூட்டணி கட்சி தலைவர்களை கைது செய்தனர். பல இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும் ‛ இண்டியா ' கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ராகுலின் 2 யாத்திரைகளும் இண்டியா கூட்டணி வெற்றிக்கு உதவியது. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்றோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மோடி குறை கூறி பேசினார். 3வது முறையாக பா.ஜ., வந்தால் அரசியல்சாசனம் திருத்தப்படும் என மக்கள் அஞ்சினர். பா.ஜ.,வின் ஆணவத்திற்கு கிடைத்த தோல்வி. தொடர்ந்து நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடுவோம். இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டதால் கிடைத்த வெற்றி சாத்தியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

நம்பிக்கை

ராகுல் கூறியதாவது: நடந்த தேர்தல் ஒரு அரசியல் ரீதியிலான தேர்தல் கிடையாது. அரசியல் அமைப்பை நிறுவனங்கள் மீதான மோடி, அமித்ஷாவின் தாக்குதலுக்கு எதிரான போர் இது.அரசியல்சாசனத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் ஆகவே இந்த லோக்சபா தேர்தல் அமைந்துள்ளது. அரசு எந்திரங்களை தவறாக பயன்படுத்தியதற்கு எதிரான தேர்தல் இது. பாஜ., மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம். இது அரசியல் சாசனத்தை காப்பதற்கான போராட்டம். அரசியல்சாசனத்தை காக்க மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அரசியல் கட்சிகளை உடைக்கும் வேலையை நாடு முழுவதும் பா.ஜ., செய்தது. தெளிவான பார்வையுடன் மக்கள் முன் எங்கள் கொள்கைகளை முன் வைத்தோம். பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. மோடிக்கு எதிரான போரில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்ட கூட்டணி கட்சிகளை மதிக்கிறோம். அரசியல் சாசனத்தை காப்பாற்றும் வேலையை விவசாயிகள், ஏழை எளிய மக்கள் செய்துள்ளனர். நாடு மோடியை புறக்கணித்து விட்டது. 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய வீதம் சரியல்ல என்பதை தேர்தல் முடிவு உணர்த்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நாளை கூட்டம்

இதனைத் தொடர்ந்து ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்சி அமைப்பது தொடர்பாக ‛ இண்டியா ' கூட்டணி கட்சியினருடன் நாளை (ஜூன் 5) நடக்கும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தெலுங்கு தேசம், ஐஜத கட்சியை அழைப்பது குறித்து நாளை ஆலோசித்து முடிவு. ஆட்சி அமைப்பதற்கு எங்களுக்கும், பா.ஜ.,விற்கும் இடையே மெலிதான கோடு மட்டுமே உள்ளது. வயநாடு, ரேபரேலியில் எந்த தொகுதியை ராஜினாமா செய்வது தொடர்பாக ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் ‛இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்க எங்களிடம் வியூகம் உள்ளது. இவ்வாறு ராகுல் கூறினார்.

ஆலோசனை

நிருபர்களின் கேள்விக்கு கார்கே கூறுகையில், எங்களின் எல்லா யுக்திகளையும் சொல்லிவிட்டால் மோடி உஷார் ஆகிவிடுவார். கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

sankar
ஜூன் 07, 2024 15:20

பளிச்சென்று யோசனை வரும்


VENKATASUBRAMANIAN
ஜூன் 05, 2024 08:22

இப்போதும் மோடிதான் வெற்றி பெற்றுள்ளார். எண்ணிக்கை மட்டுமே குறைவு.. எதிர்கட்சியினர் எல்லோரும் சேர்ந்தால் கூட பாஜக பெற்ற ஓட்டுக்களை எட்டவில்லை. இதில் காங்கிரஸ் பெருமைப்பட என்ன இருக்கிறது. பாஜக சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.


Suresh Shanmugam
ஜூன் 05, 2024 05:37

வாழ்க்கையில் 100க்கு 15 மார்க் வாங்கியவன் 48 மார்க் வாங்கியவன் தோல்வின்னு சொல்லுறத இப்பதான் பார்க்கிறேன்.


NRajasekar
ஜூன் 05, 2024 03:29

இவர்கள் செய்தால் வியூகம் மற்றவர்கள் செய்தால் குதிரை பேரம் மாத்திற்க்கு ஒரு பின் இருந்தால் அதன் கூட்டணியே நிக்கும் அந்நிய நாட்டில் இந்தியாவை இகழ்ந்து பேசி விரோதி நாட்டுடன். ஒப்பந்தம் போட்டு இப்படி ஒருவன் நல்ல நாடாக இருக்கும் இந்தியாவுக்கு தேவையில்லை


arasiyal kelvi tv
ஜூன் 05, 2024 00:28

ராகுலை விமர்சிக்கும் நண்பரே பிஜேபி ஆட்சியில ஊழலே இல்லையா பிஜேபி ஆளும் மாநிலங்களில் எத்தனைமுறை ரைடு நடத்தப்பட்டது சொல்லுங்கள் உண்மையான ஊழல் கட்சி என்றால் அது பிஜேபி தான்


Ramesh.M
ஜூன் 04, 2024 22:53

எங்க இத்தாலியிலா?


மாயவரத்தான்
ஜூன் 04, 2024 22:52

ஐயா நீங்கள் எதிர்க்கட்சியாக அத்தனை கட்சிகளும் இணைந்து பெற்ற தொகுதிகளை பாஜக தனியாக ஒரு கட்சியாக பெற்றுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் மட்டும் ஆட்சி அமைத்தால் இந்தியாவில் நித்தம் ஒரு ஊழல் மாதம் ஒரு மாபெரும் ஊழல் அங்கங்கே குண்டு வெடிப்புகள் என்று தான் நடக்கும்.


Bala Paddy
ஜூன் 04, 2024 21:13

நீ ஒரு அசிங்கம் பிடித்த நச்சு பாம்பு. உன்னை அடிக்காமல் விட்டது தான் மோடியின் தவறு.


rsudarsan lic
ஜூன் 04, 2024 20:29

ஆக உங்க வேலைய முதல் நாளே ஆரம்பிக்க போறீங்க பார்த்து செய்யுங்க மொத்தம் 28 ஓட்டைகள் இருக்கின்றன


GMM
ஜூன் 04, 2024 19:58

யூகம் வகுக்க முடியும். பணம் பாதாளம் வரை பாயும். தெளிவான சட்டம் இல்லை. இருந்தாலும் நீதிமன்றம் அமுல் படுத்த விடாது. பிஜேபி முக்கிய தலைமையின் அதிக பயம் காரணம். ஆட்சியில் நீடிக்க ஆசை. ஜெயா, இந்திரா துணிவு இல்லை. பொன்முடி தீர்ப்பு எதிர்த்து நிற்க முடியவில்லை. மக்கள் அரசியல் பழி வாங்கும் செயல் என்று கருதி திமுகவிற்கு முழு ஆதரவு.? தேர்தல் பத்திர வழக்கில் நீதிமன்றம் இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி வந்தது. நிறுத்த முடியவில்லை. மம்தா மத்திய எதிர்ப்பு. பிஜேபி இயலாமை, தவறுகள் என்று மக்கள் எண்ணுவர். நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் முழு விளையாட்டு. 3 தேர்தல் ஆணையர். 1. வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், வாக்கு போடுவது கட்டாயம் என்றும் கூறலாம். 30 கோடி பேர் வாக்களிக்க வில்லை?. நோட்டோ நீக்க துணிவு இல்லை. 2. குற்ற வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். வழக்கறிஞர் நீதிமன்றம் மூலம் தடுத்து வருகின்றனர். 3. தேர்தல் நடவடிக்கை கண்காணிப்பு. வாக்காளர், வேட்பாளர் தேர்தல் ஆணையம் கண்டு அஞ்சுவது இல்லை. பிஜேபி நீதிமன்ற, நிர்வாக தவறு மீது துணிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் ஊழல் காங்கிரஸ் கட்சியிடம் விட்டு விடவும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை