உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணியில் குழப்பம் இல்லை: சொல்கிறார் சரத்பவார்

இண்டியா கூட்டணியில் குழப்பம் இல்லை: சொல்கிறார் சரத்பவார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ‛ இண்டியா' கூட்டணிக்கு அமைப்பாளராக யாரை நியமிப்பது என்ற விவகாரத்தில் குழப்பம் ஏதும் இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த கூட்டத்தில், நிதீஷ்குமாரை அமைப்பாளர் ஆக நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், நிதீஷ்குமார் அமைப்பாளர் பதவி தேவையில்லை. அதற்கு பதிலாக கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவை அமைக்கலாம் என கூறிவிட்டார். இதில் கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை.கூட்டணி மற்றும் லோக்சபா தேர்தலுக்கு தயார் ஆவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. யாரை முன்னிலைப்படுத்தியும் ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு பிறகு தலைவர் தேர்வு செய்யப்படுவார். மத்தியில் மாற்று அரசு அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. 1977 தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் மொரார்ஜி தேசாயை பிரதமர் வேட்பாளர் ஆக முன்னிறுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கண்ணன்
ஜன 14, 2024 06:24

பாவம் கூட்டணிக்குழப்பத்தில் இவரும் குழம்பிக் கலங்கி ஏதோ பிதற்றுகிறார்


Ramesh Sargam
ஜன 14, 2024 05:57

கூட்டணியே கூட வில்லை. அப்புறம் குழப்பம் எங்கே வரும்.


நரேந்திர பாரதி
ஜன 14, 2024 04:10

நீங்க, மம்தா பேகம், லல்லு, அப்துல்லா பாய் மற்றும் அந்தோனியோ மைனோ/ பப்பு இருக்குற வரைக்கும் குழப்பத்திற்கு பஞ்சம் என்ன??


வீரா
ஜன 13, 2024 21:08

நிதீஷ் பிஜேபி பக்கம் தாவ தயார். பிஜேபி முதல்வர் பதவியை தந்தது ஆனால் துணை முதல்வர் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை. லாலு குடும்பம் முதல்வர் பதவிக்கு குறி வைத்துவிட்டது. கார்கே கெஜ்ரிவால் மம்தா சோனியா ராகுல் லாலு சரத்பவார் ஸ்டாலின் சீத்தாராம் எட்ச்சுரி காஷ்மீரின் முப்தி மற்றும் அப்துல்லா கூட்டத்திடம் மொத்தமாக அவமானபடுவதை விட பிஜேபி தயவில் சிறிது காலம் முதல்வராக மானத்துடன் வாழ முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது.


Krishnamoorthy Nilakantan
ஜன 13, 2024 18:58

பூனைக்கு மணி கட்டலாம் சிங்கத்திற்கு?


Pandi Muni
ஜன 13, 2024 18:51

என்னாச்சு திருட்டு பசங்களுக்குள் பங்கு பிரச்சனை செட்டில் ஆகிடுச்சோ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை