நல்லதுக்கு காலம் இல்லை! சந்தோஷ் ஹெக்டே வருத்தம்
பெங்களூரு: “நேர்மையானவர்களுக்கு இந்த சமூகத்தில் மதிப்பே இல்லை,” என, லோக் ஆயுக்தா ஓய்வு நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வருத்தத்துடன் தெரிவித்தார்.பெங்களூரு, பேட்ராயனபுராவில் கன்னட சாகித்ய பரிஷத் ஏற்பாடு செய்திருந்த, கன்னட ராஜ்யோத்சவா நிகழ்ச்சியில், லோக் ஆயுக்தா ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:செல்வத்தையும், அதிகாரத்தையும் மட்டுமே அங்கீகரிக்கும் சமூகத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நேர்மையானவர்களுக்கு இந்த சமூகத்தில் மதிப்பே இல்லை. நல்ல செயல்களை செய்தவர்களை அங்கீகரித்து கவுரவிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.இதன்மூலம் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். அன்றாட வாழ்வில் கன்னட மொழியை அதிகம் பயன்படுத்துவதோடு, பிறருக்கு கன்னடத்தை அன்புடன் கற்றுக் கொடுப்பதன் மூலம் மொழியை காப்பாற்றி வளர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.