உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம் இருக்கலாம்; எல்லாம் அணியின் நன்மைக்கே; கவுதம் கம்பீர் சூசகம்!

இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம் இருக்கலாம்; எல்லாம் அணியின் நன்மைக்கே; கவுதம் கம்பீர் சூசகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்திய டெஸ்ட் அணியில் மாற்றங்கள் நடக்கலாம். எது நடந்தாலும் இந்திய அணியின் நன்மைக்காக இருக்கும்' என தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் அந்த அணி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்றது. இந்தியாவின் தோல்வியை கண்டு, ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். சமூகவலைதளத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஓய்வறையில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நான் நேர்மையாக இருக்க வேண்டும். அனைத்து வீரர்களும் உடனடியாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் எதிர்காலம் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது. இந்திய டெஸ்ட் அணியில் மாற்றங்கள் நடக்கலாம். எது நடந்தாலும் இந்திய அணியின் நன்மைக்காக இருக்கும். இந்திய டெஸ்ட் அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இவ்வளவு சீக்கிரம் பேசுவது சரியாக இருக்காது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய இடைவெளியில் மாற்றங்கள் நடக்கலாம். இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதனால் அதற்கேற்ப முடிவுகள் கிடைத்துள்ளது. அதனை நேர்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த டெஸ்ட் தொடரை பொறுத்தவரை பும்ரா அற்புதமாக செயல்பட்டார். அவருக்கு உறுதுணையாக முகமது சிராஜ் மற்றும் ஹர்சித் ராணா இருவரும் இருந்தனர் என்று கருதுகிறேன். இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Velan Iyengaar
ஜன 05, 2025 18:31

எப்போ சங்கி கம்பீரை உள்ளே கொண்டுவந்தங்களோ அப்போவே இந்திய கிரிக்கெட் அணி புஸ்ஸூ ஆயிடிச்சு .... இவர வெளியே துரத்தினா மீண்டும் கௌரவம் கிடைக்கும் ....


Kumar Kumzi
ஜன 05, 2025 19:26

ஓசிகோட்டர் கொத்தடிமை... இதுல சாங்கி எங்க இருந்து வந்துச்சி


Velan Iyengaar
ஜன 05, 2025 20:14

உம்மோட அறிவு எவ்ளோ மட்டம் என்பதும் ...சங்கிகளின் அறிவு எவ்ளோ கேவலம் என்பதும் இந்த ஒரு கருத்தில் தெளிவாகி விட்டது


Kumar Kumzi
ஜன 05, 2025 22:21

பார்ரா.... கோபாலபுரம் ஓசிகோட்டர் கொத்தடிமைக்கு எம்பூட்டு அறிவு...


Kumar Kumzi
ஜன 07, 2025 15:18

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறின அடிமைக்கு பெயரை பாரு ...த்தூ


MM
ஜன 05, 2025 17:16

First change should be coach


vijai
ஜன 05, 2025 13:49

இந்த ஆளு யாரு கோச்சா வச்சாங்க வேற ஆளு யாருமே கிடைக்கலையா


Apposthalan samlin
ஜன 05, 2025 13:44

கம்பிர் பயிரிச்சியாளருக்கு சரி வர மாட்டார் இவரை நீக்கி விட்டு ராகுல் ட்ராவிடை மீண்டும் கொண்டு வர வேண்டும் .


Kumar Kumzi
ஜன 05, 2025 13:44

மொதல்ல பதவி விலகு சோம்பீர்


rajaguru
ஜன 05, 2025 13:34

முதலில் கோச் சாரை மாற்றுங்க சார்


Naresh Kumar
ஜன 05, 2025 13:25

முதல்ல உன்ன மாத்தணும்டா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை