உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அஜித் பவார் சென்ற விமானத்தில் கோளாறு இல்லை: உரிமையாளர் பேட்டி

அஜித் பவார் சென்ற விமானத்தில் கோளாறு இல்லை: உரிமையாளர் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இல்லை. நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது,'' என அந்த விமான நிறுவனத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், இன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவர், பயணித்த விமானமானது டில்லியைச் சேர்ந்த விஎஸ்ஆர் ஏவியேஷன் நிறுவனத்தின் லியார்ஜெட் 45 விமானம் ஆகும். இந்த லியார்ஜெட் 45 ரக விமானம் கடந்த 2023 ம் ஆண்டு மும்பை விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியிருந்தது.தற்போது இந்த ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அஜித் பவார் உயிரிழந்த நிலையில், விஎஸ்ஆர் ஏவியேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் விகே சிங் கூறியதாவது: விமானங்கள் அனைத்தும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. அதன் தரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கிடையாது. இந்த விமானங்களை தரையிறக்க மாட்டோம். அனைத்தும் தகுதி வாய்ந்த விமானங்கள். அவற்றை தரையிறக்க வேண்டிய அவசியம் என்ன?உலகம் முழுவதும் நம்பகமான விமானமாக லியெர்ஜெட் ரக விமானங்கள் உள்ளது. அப்படி இருக்கையில் இந்த விமானங்களை தரையிறக்க வேண்டிய அவசியம் என்ன. இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்காவை சேர்ந்த பில் லியார் என்பவரால் இந்த லியெர்ஜெட் ரக விமானம், சுவிட்சர்லாந்துக்காக 8 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கினார். பிறகு 1990 ம் ஆண்டு கனடாவை சேர்ந்த பாம்பர்டையர் நிறுவனம் இதனை கையகப்படுத்தியது. 2021ம் ஆண்டு இந்த ரக விமானத்தை நிறுத்துவதை அந்த நிறுவனம் நிறுத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kannan
ஜன 29, 2026 19:37

தரை இறக்க மாட்டோம்னு ஓனர் சொல்றாருன்னா என்ன அர்த்தம். என்ஜின்ல கோளாறு இல்லைனா அப்புறம் எப்படி வெடித்து சிதறியது. கருப்பு பெட்டி ஆய்வுக்கு முன் இப்படி ஏன் கண்டபடி அவர் பேசினார்...


கருப்பன்
ஜன 29, 2026 15:09

இந்த ப்ளாக் பாக்ஸ் நு ஒண்ணு இருக்குமே. அது கிடைச்சுதா?அதுவும் நொறுங்கி காணாம போச்சா? இப்பவே முந்திக்கொண்டு அறிக்கை உடறாங்களே.


Senthoora
ஜன 29, 2026 08:44

சரி, ரி பைலட் மேல் பழிபோட்டு அந்த அப்பாவிகளின் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் கொடுங்க, மணிலா அரசு சார்பாகவும் கொடுங்க, பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டு பைலட் ஆகினாங்க, பெற்றோரின் கனவுகள். பாதுகாவலர் எப்படி பயிட்சி முடித்து வந்தாங்க. அவங்க குடும்பத்தையும் கவனிங்க.


அப்பாவி
ஜன 29, 2026 08:01

கவலையே வாணாம். யார் மீதும் தவறு இல்லைன்னு இழுத்து மூடிருவாங்க.


KRISHNAN R
ஜன 28, 2026 22:09

கோளாறு காரணமாக அல்லது கோளாறு இல்லாத நிலையோ,, வானிலை மற்றும் விதி தான் என்று கொள்ள வேண்டும். மேலும் எந்த பைலட்டும் தவறு செய்ய வாய்ப்பில்லை


Ramesh Sargam
ஜன 28, 2026 21:41

கோளாறு விமானத்தில் இல்லை. கோளாறு மம்தா போன்றவர்களின் எண்ணத்தில். எதிலும் அரசியல் செய்வதே அவர்களின் எண்ணம்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 29, 2026 01:07

குறுகுறுன்னு இருக்கா?


N.Purushothaman
ஜன 29, 2026 08:47

திருட்டு திராவிட கட்சியுடன் தொடர்பில் இருப்பதால மம்தாவுக்கு ... அரசியல் செய்யும் கலை வந்துவிட்டது ....


duruvasar
ஜன 28, 2026 21:32

ஸ்டாலின் கூடத்தான் எங்கள் அரசு ஊழலற்றது என பேசுகிறார்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 29, 2026 01:10

மோடி கூடத்தான் நஹி காவூங்கா, கானே நஹி தூங்கா ன்னு காமெடி பண்றாரு.


Senthoora
ஜன 29, 2026 05:11

வேறு அரசியல்வாதிகள் அப்படி பேசுவதில்லையா?


duruvasar
ஜன 29, 2026 16:27

என் கருத்தால் இரண்டு பேர் 400 ரூபாய் பெற்றிருப்பது மகிழ்சியே


புதிய வீடியோ