உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உட்கட்சி சண்டைக்கே நேரம் போதவில்லை; காங்கிரசை கிண்டல் செய்த மோடி!

உட்கட்சி சண்டைக்கே நேரம் போதவில்லை; காங்கிரசை கிண்டல் செய்த மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'காங்கிரஸின் அதிகபட்ச நேரம் உட்கட்சி சண்டையில் போய்விடுகிறது. அவர்களுக்கு அதுக்கே நேரம் பத்தவில்லை' என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு வரும் அக். 05 ல் தேர்தல் நடக்கிறது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், இன்று(செப்.,26) ஹரியானா பா.ஜ., தொண்டர்களிடம் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருகிறது. காங்கிரஸின் அதிகபட்ச நேரம் உட்கட்சி சண்டையில் போய்விடுகிறது. அவர்களுக்கு அதுக்கே நேரம் பத்தவில்லை. ஹரியானாவில் உள்ள மக்களுக்கு அவர்களின் உட்கட்சி மோதல்கள் தெரியும்.

கடின உழைப்பு

10 ஆண்டுகளாக பொது பிரச்னையில் இருந்து விலகி, குடும்ப நலனிற்காக செயல்பட்டு வருகிறது காங்கிரஸ். வாக்குச் சாவடியில் வெற்றி பெற்றவர் ஓட்டெடுப்பில் வெற்றி பெறுகிறார். பா.ஜ.,வுக்கு சேவை செய்ய மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க ஹரியானா மக்கள் முடிவு செய்துள்ளார்கள். ஹரியானாவின் பழைய தலைமுறை தொண்டர்களாக இருந்தாலும் சரி, புதிய தலைமுறையினராக இருந்தாலும் சரி, அவர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்துள்ளது. மிகத் தீவிரமான விஷயத்தைக் கூட மிகவும் புத்திசாலித்தனமாக, நகைச்சுவைத் தொனியுடனும் செய்யும் திறன் அவர்களுக்கு உள்ளது. இதை ஹரியானாவிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
செப் 27, 2024 11:59

உள்ளூர் பிரச்சினையை தீர்த்து வைக்க வக்கில்லாதவர் உக்ரைன் பிரச்சினையை தீர்த்து வைக்கப் போகிறேன் என்று சொல்வது போலவா?


Kasimani Baskaran
செப் 27, 2024 05:47

காங்கிரஸ் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் காங்கிரஸ் கட்சியை தடை செய்ய வேண்டும்.


பல்லவி
செப் 26, 2024 20:21

உரக்கச் சொல்வோம் எங்களிடமும் ஒரு இசை குரல் இருக்குதுங்கோ


பஞ்சாபகேசன்
செப் 26, 2024 18:40

ஒருத்தருக்கு உக்ரைனுக்கு ரயில்ல போகவே நேரம் சரியா இருக்கு. மணிப்பூர் எங்கே இருக்குன்னு கேக்குறாரு.


hari
செப் 26, 2024 19:36

பஞ்சத்தில் அடிப்பட்டவன் எல்லாம் மணிப்பூர் பத்தி பேசுறான்.. கொடுமை


அசோகன்
செப் 26, 2024 17:55

ஆனா இந்தியாவை அழிக்க ராகுலுக்கு நேரம் நிறைய இருக்கே அது போதாதா


P. VENKATESH RAJA
செப் 26, 2024 15:48

பாஜாவிலும் சில மாநிலங்களில் உட்கட்சி பூச நிலவுகிறது


Velan Iyengaar
செப் 26, 2024 15:28

இவனுங்களுக்கு மன்னிப்பு கேட்கவே நேரம் போதவில்லை ... போதாத குறைக்கு கூட்டணி கட்சிகளை சமாளிக்க நேரம் எப்போதுமே போதாது .....


hari
செப் 26, 2024 19:38

இந்த வேலன் கொசு வேற.. சும்மா கோய் கோய்–னு சவுண்ட் விடுகிட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை