உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம்: ராகுலை ஏற்க மாட்டார்கள்!

தேசியம்: ராகுலை ஏற்க மாட்டார்கள்!

ராகுலை ஏற்க மாட்டார்கள்!

வெளிநாட்டு மண்ணில் இருந்து தன் அரசியல் வாழ்க்கையை மீண்டும் தொடங்க, காங்., லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் முயற்சி செய்கிறார். அவர் என்ன தான் செய்தாலும், நாட்டின் மீது ஒவ்வொரு அணுவிலும் வெறுப்பை கொண்ட ஒருவரை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அதனால் தான், ராகுலை புறக்கணிக்கின்றனர்.- பிரதீப் பண்டாரிதேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

துாண்டிலில் சிக்க வேண்டாம்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில், அனைத்து மாநிலங்களின் தொகுதிகளையும், 50 சதவீதம் உயர்த்துவதாக மத்திய பா.ஜ., அரசு துாண்டில் போடுகிறது. இது போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்ப வேண்டாம். இந்த துாண்டிலில் எதிர்க்கட்சிகள் சிக்கினால், நாட்டில் ஜனநாயகம் பிழைக்காது.- கபில் சிபல்ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,

துணை போகக்கூடாது!

உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். ஆனால், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அழுத்தத்தால், 3 கோடி வாக்காளர்களை குறுக்கு வழியில் சேர்க்க தேர்தல் கமிஷன் முயற்சி செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. பா.ஜ.,வின் சதிக்கு அதிகாரிகள் துணை போகக் கூடாது.- அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை