உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வழிக்கு வந்துவிட்டனர்!

வழிக்கு வந்துவிட்டனர்!

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு மாநிலத்தில் தனியார் பல்கலைகள் துவங்க அனுமதிக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. 19ம் நூற்றாண்டில் நிறைவேற்ற வேண்டிய திட்டத்தை தற்போது இடதுசாரிகள் செயல்படுத்தி உள்ளனர். 22ம் நுாற்றாண்டில் தான் அவர்கள் 21ம் நுாற்றாண்டில் நுழைவர்.- சசி தரூர்லோக்சபா எம்.பி., -- காங்கிரஸ்

யார் துரோகி?

குணால் கம்ரா என்னை துரோகி என அழைத்ததன் பின்னணியில் சிவசேனா உத்தவ் கட்சியினர் உள்ளனர். சபாநாயகர், தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றம் ஆகியோர் யார் துரோகி என அடையாளம் காட்டிவிட்டனர். தேர்தலில் மக்களும் துரோகிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிவிட்டனர்.- ஏக்நாத் ஷிண்டேமஹா., துணை முதல்வர், சிவசேனா

நக்சலை ஒடுக்கியுள்ளோம்!

நக்சல் வன்முறையால் நாட்டில் நடந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 85 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2010ல் நக்சல் தாக்குதல்களால் 1,005 பேர் உயிரிழந்த நிலையில், அது 2024ல் 150 ஆக குறைந்துள்ளது. நக்சல்களை ஒடுக்க மத்திய உள்துறை எடுத்த உறுதியான நடவடிக்கைகள் இதற்கு காரணம்.- நித்யானந்த் ராய்மத்திய இணையமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை