உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்: பிரதமர் மோடி பேச்சு குறித்து கார்கே கருத்து

உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்: பிரதமர் மோடி பேச்சு குறித்து கார்கே கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசியது, உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரை துவக்கிய சிறிது நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முழக்கம் எழுப்பினர். பிறகு, ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: ராஜ்யசபாவில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் மோடி பேசியது, உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள். பொய் சொல்வது அவரது வழக்கம்.

உருவ பொம்மை

சில தவறான விஷயங்களை சபையில் கூறியதால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். அரசியலமைப்பு சட்டத்தை அவர்கள் எதிர்த்தனர். அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் யார் செயல்படுகின்றனர் என்பதை மக்களுக்கு நான் தெளிவுப்படுத்தினேன். அம்பேத்கர் மற்றும் நேருவின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர். ஆனால், அம்பேத்கரை நாங்கள் அவமரியாதை செய்தோம் என மோடி லோக்சபாவில் பேசி உள்ளார். இவ்வாறு கார்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

vikram
ஜூலை 03, 2024 23:42

எதனா ஒன்னு உளறிக்கிட்டு இருக்கும்


sankaranarayanan
ஜூலை 03, 2024 21:07

மஹாராஷ்டிராவில் நேரு காங்கிரசு அம்பேத்காரரை தேர்தலில் தோற்கடித்தது உண்மைதான் அதுபோன்றே தமிழகத்தில் கர்மவீரர் காமராஜரை தேர்தலில் தோற்கடித்த பெருமை திராவிட முன்னேற்ற கட்சிக்குத்தான் பெருமை .அந்தகோ என்ன ஒரு ஒற்றுமை பெருமை இவர்களுக்குள்


தாமரை மலர்கிறது
ஜூலை 03, 2024 18:46

மோடி அம்பேதகருக்கு ஆதரவாகத்தான் எப்போதும் பேசியுள்ளார். இன்று அம்பேத்கார் உயிரோடு இருந்தால், மோடியை பற்றி பெருமையாக பேசி இருப்பார்.


Mettai* Tamil
ஜூலை 03, 2024 16:46

ஒரு தேர்தலில் அம்பேத்கரை , காங்கிரஸ் தோற்கடித்ததாக சொல்லப்படுகிறதே உண்மையா?


venugopal s
ஜூலை 03, 2024 16:29

அவர் வாயைத் திறந்தாலே பொய் தான் வரும் என்பது தான் ஊருக்கே தெரியுமே!


Kannan
ஜூலை 03, 2024 16:13

These guys are all only thieves and to loot they contest elections- recent corruption charge in Karnataka- Land allocation scam worth Rs.4000 Crs


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 15:20

இடஒதுக்கீட்டை எதிர்த்து அம்பேத்கரை நேரு முறைத்துக் கொண்டது உண்மை. மற்ற மதத்தினருக்கு இஷ்டப்படி தலாக் கூற உரிமை அளித்து விட்டு ஹிந்துக்களுக்கு மட்டும் தனி சிவில்சட்டம் கொண்டு வந்து நடுநிலை தவறியது நேரு. 94 முறை எதிர்கட்சி ஆண்ட மாநில அரசுகளைக் கலைத்தது காங்கிரஸ். அமைச்சரவையைக் கூட்டி ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக அவசரநிலையை அமல்படுத்தியது இந்திரா. லட்சம் கோடி ஊழல்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கூட்டணி. இவர்களெல்லாம் அரசியல் சட்டத்தைப் பற்றி வாய்திறப்பதே அசிங்கம்.


Kannan
ஜூலை 03, 2024 15:13

மோடி அவர்கள் சொன்னது நூறுசதவீதம் உண்மை மஹாராஷ்டிராவில் அம்பேத்காரை தோற்க்கடித்தது


சதீஷ்
ஜூலை 03, 2024 15:04

இவ்வளவு கீழ்தரமான நிலைக்கு காங்கிரஸ் சென்றுவிட்டதே எல்லாம் வயத்தெரிசலாக இருக்கும் பெரிய கூட்டணி வைத்தும் வெற்றி பெறமுடியாததே இதன் காரணமாக உள்ளது


R KUMAR
ஜூலை 03, 2024 14:38

அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் பற்றி பேசும் இவர்கள், அந்த அரசியல் அமைப்பு சட்ட விதிகளில் எத்தனை க்ஷரத்துகள் உள்ளன, எத்தனை விதிகள் உள்ளன, இன்னும் சொல்லப் போனால் எத்தனை பக்கங்கள் உள்ளன என்று கூட தெரியாத ... அளவில்தான் உள்ளனர். இந்த விவரங்களை கேட்டவுடன் கூச்சல் போட்டுக்கொண்டு விவரங்கள் தெரியாததை மறைக்க அவையை விட்டு வெளியேறியததுதான் HIGHLIGHT


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை