உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருவள்ளுவர் சங்க தலைவர் கி.சு.இளங்கோவன் மறைவு

திருவள்ளுவர் சங்க தலைவர் கி.சு.இளங்கோவன் மறைவு

விஜயநகர்: தமிழ் ஆர்வலரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவருமான கி.சு.இளங்கோவன் காலமானார்.பெங்களூரு, விஜயநகர் அமர்ஜோதி நகரில் வசித்து வந்தவர் கி.சு.இளங்கோவன், 75. தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்த இவர், தமிழ் மீதும், திருவள்ளுவர் மீதும் மிகவும் பற்று கொண்டவர்.இதனால், பெங்களூரு திருள்ளுவர் சங்கத்தை நிறுவி, அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். 'தித்திக்கும் திருக்குறள்' என்ற பெயரில், திருக்குறள் வகுப்புகளை நடத்தி வந்தார்.சில நாட்களாக உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2:10 மணியளவில் காலமானார். இவருக்கு, மனைவி அன்னம்மாள், மகள் வெண்ணிலா, மகன் அருள் உள்ளனர்.தமிழ் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னை முன்னிலைப்படுத்தி, ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். இளங்கோவன் மறைவுக்கு, பல தமிழ் அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் நேற்று இறுதி அஞ்சலிக்காக, உடல் வைக்கப்பட்டது.உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் 2:00 மணிக்கு, பெங்களூரு மருத்துவ கல்லுாரிக்கு, அவரது உடல் தானம் செய்யப்படுகிறது. மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு வழங்கும்படி, இறப்பதற்கு முன்பு, அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ