உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது பெருமைக்குரிய விஷயம்; மூன்று போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பிரமிப்பு

இது பெருமைக்குரிய விஷயம்; மூன்று போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பிரமிப்பு

மும்பை: மூன்று முன்னணி போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் அதிகாரிகளை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். பின்னர் அவர்,ஐ.என்.எஸ்., வக்சீர், ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., சூரத் என்ற 3 கடற்படை போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம், கடற்படையின் புகழ்பெற்ற வரலாறு ஆகியவற்றிற்கு இன்று மிக முக்கியமான நாள். 21ம் நூற்றாண்டின் கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில் நாங்கள் மிக பெரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். மூன்று முன்னணி போர்க்கப்பல்கள் மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று போர்க்கப்பல்களும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம். இன்றைய இந்தியா உலகின் முக்கிய கடல்சார் வல்லரசாக வளர்ந்து வருகிறது. இன்று ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன். மூன்று முன்னணி போர்க்கப்பல்களும் ஒரே நேரத்தில் இயக்கப்படும். இந்த சாதனைக்காக ஒட்டுமொத்த தேசத்திற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். புதிய போர்க்கப்பல்களின் சிறப்பம்சங்கள் சில வரிகளில்...!* P15B வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் நான்காவது மற்றும் இறுதிக் கப்பலான ஐ. என். எஸ்., சூரத், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வசதி கொண்ட கப்பலில் ஒன்றாகும். இது 75 சதவீதம் உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டுள்ளது.* P17A ஸ்டெல்த் திட்டத்தின் முதல் கப்பலான ஐ.என்.எஸ்., நீலகிரி, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது அடுத்த தலைமுறை உள்நாட்டு போர் கப்பல்களில் முக்கியமான ஒன்றாக திகழும்.* P75 ஸ்கார்பீன் திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., வாக்சீர், நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. இது பிரான்சின் கடற்படைக் குழுவுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

R. SUKUMAR CHEZHIAN
ஜன 15, 2025 19:15

வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம் பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம் எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்? என்கிற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. ஜெய் ஹிந்த்??


RAMAKRISHNAN NATESAN
ஜன 15, 2025 17:26

நாடு பீடுநடை போட இன்னும் பல சாதனைகள் படைப்போம் ...... வாழ்த்துக்கள் .....


subramanian
ஜன 15, 2025 16:57

பாரதத்தின் ரத்தினம் மோடி இன்னும் கோடி ஆண்டுகளுக்கு பிரதமாராக இருக்க வேண்டும். பாரத மாதா கி ஜெய்


Visu
ஜன 15, 2025 14:02

இத்தாலி காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்று சம்பவங்கள் கனவிலும் நிகழாது. சம்பத்துக்கு 200 ரூபாய் 300 ஆக உயர்ந்தால்தான் பெருமை


இறைவி
ஜன 15, 2025 14:00

காலம் காலமாக கோடானு கோடி ரூபாய்களை கொடுத்து, அந்நிய செலாவணியில் தவித்து, கப்பல்களை இறக்குமதி மட்டுமே செய்து வந்தோம். இன்று நீர் மூழ்கி முதல் விமானம் தாங்கி கப்பல்கள் வரை நாமே உருவாக்குகிறோம். அந்த அளவிற்கு இந்திய தொழில் நுட்பத்தை போற்றி வளர்க்கிறது இந்த மத்திய அரசு. ... இவர்கள் வழி தொண்டர்களுக்கு இவை எதுவுமே பாராட்டும்படியாக இருக்காது.


vikneshkv
ஜன 15, 2025 13:28

மூன்று கப்பல்களை இந்தியா திரு நாட்டிற்கு அர்ப்பணித்த பாரத பிரதமர் திரு மோடி அவர்களுக்கு எனது சார்பிலும் இந்தியா திருநாட்டின் சார்பிலும் கோடான கோடி வணக்கம்


jagadesh
ஜன 15, 2025 13:19

இந்து மதத்தை தவிர பிறமதம் மாறியவன் எந்தஒருவனும் பொங்கல் கொடாடுவதில்லை மேலும் தமிழ் பெயர்களை இந்து மதத்தவர் தவிர பிற மதத்தவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைப்பதில்லை


Sampath Kumar
ஜன 15, 2025 12:52

இது என்ன பெருமை இருக்கு?


Ganapathy
ஜன 15, 2025 13:29

அதானே, ராசபக்சமுன்னாடி நாம மண்டிபோட்டு நாரிபோன அசிங்க கதையவிடவா இது பெரிசு?


veera
ஜன 15, 2025 16:16

அறிவிலி சொம்பு சம்பத்து


RAMAKRISHNAN NATESAN
ஜன 15, 2025 17:25

நாறபீசுகளுக்கு ஏனோ ஆண்டவன் தலையில் வைப்பதற்கு பதிலா அங்கே வெச்சுட்டான் ....


Sampath
ஜன 15, 2025 12:38

ஒரு பாட்டில் சாராயமும் 200 ரூபாயும் ஒரு ஊருக்காய் மட்டுமே எங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும். நங்கள் மானங்கெட்ட தமிழிரர்கள் .


Ramesh Sargam
ஜன 15, 2025 12:29

வாழ்த்துக்கள். நான் ஒரு இந்தியன் என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் ஒரு முந்தைய ராணுவவீரரின் மகன் என்று கூறிக்கொள்வதில் அகங்காரம் கொள்கிறேன்.


சமீபத்திய செய்தி