உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலைக்கு வெளிநாடு செல்வோர் உஷார்; ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் குமுறல்!

வேலைக்கு வெளிநாடு செல்வோர் உஷார்; ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் குமுறல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: பிரதமர் மோடி தலையீட்டின் பேரில் ரஷ்யா ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் நாடு திரும்பினர். அங்கு அவர்கள் பட்ட வேதனையையும், துயரத்தையும் கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.ரஷ்யாவில் பெரிய நிறுவனத்தில் வேலை, லட்சக்கணக்கில் சம்பளம் என இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களை ஏமாற்றி ரஷ்யாவிற்கு அழைத்து செல்லும் மோசடிகாரர்கள் அவர்களை அந்நாட்டு ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்து விட்டனர். ஏமாந்த இளைஞர்கள் பலர், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். மீட்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தார். அப்போது, இந்திய இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ரஷ்ய அதிபர் புடின் உறுதி அளித்தார். அதன்படி, தெலுங்கானா, கர்நாடகாவை சேர்ந்த 4 பேர் , ரஷ்ய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாய்நாடு திரும்பினார்.

அடிமைகள்

அவர்களில், தெலுங்கானாவைச் சேர்ந்த சுபியான் என்ற இளைஞர் கூறியதாவது: ரஷ்யாவில் நாங்கள் அடிமைகளாக நடத்தப்பட்டோம். தினமும் காலை 6 மணிக்கு எழும் நாங்கள் தொடர்ச்சியாக 15 மணிநேரம் வேலை பார்ப்போம். இடையில் எந்த ஓய்வும் இருக்காது. குறைந்தளவு உணவே வழங்கப்பட்டது. எங்களது கைகளில் கொப்புளம் ஏற்பட்டது. முதகுவலியுடன் அவதிப்பட்டோம். நாங்கள் சோர்வுக்கான அறிகுறியை காட்டினால், எங்களை மீண்டும் கடினமான பணிக்கு தள்ள நிர்பந்திக்கப்பட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடகாவை சேர்ந்த அப்துல் நயீம் என்பவர் கூறுகையில், எங்களது மொபைல் போன் பறித்து கொண்டதும், பல மாதங்கள் பயிற்சிஅளிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படவில்லை என்றார்.கர்நாடகாவின் கல்புர்கியை சேர்ந்த சயீத் ஹூசைனி கூறியதாவது: தினமும் காலை எழும்நாங்கள், இது தான் எங்களது கடைசி நாள் என நினைத்தோம். துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு சத்தத்திற்கு மத்தியில் அச்சத்துடன் எங்களது வாழ்க்கை நகர்ந்தது என்றார்.தங்களை போல் 60 பேர் ரஷ்யாவில் சிக்கியதாகவும், அவர்களில் பலர் மீட்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சமூக நல விரும்பி
செப் 14, 2024 21:32

இந்தியாவிலிருந்து மக்களை ரஷ்யாவுக்கு அழைத்து சென்ற புரோகேர்களை சிறையில் அடைத்து இனி இந்த தொழில் செய்ய முடியாமல் குறைந்தது பத்து வருடங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் .


தமிழ்வேள்
செப் 14, 2024 19:12

த பார்ரா..கொடுமை அனுபவிச்சாங்களாம்...சொல்றது மூர்க்கம்.... பாரதத்தில் 900 ஆண்டுகளாக இந்த மத வெறியர்களின் கையில் சிக்கி ஹிந்து ஜனங்கள் அனுபவிக்கும் கொடுமையை எங்கு போய் சொல்வது... ஹிந்து ஜனங்களை கொடுமைப்படுத்தும் பாகிஸ்தான் பங்களாதேஷ் சொந்தங்களிடம் இதைச் சொல்லு...போ...


appusaami
செப் 14, 2024 18:01

எல்லாராலும் கட்டிப் புடிச்சி டீ சாப்புட்டு இது போருக்கான நேரமில்லைன்னு பேச முடியுமா? நீங்க போய் சம்பாரிச்சி அனுப்புனாத்தானே இங்கே அந்நிய செலாவணி இருப்பு புது உச்சத்தைத் தொடும்?


Kumar Kumzi
செப் 14, 2024 17:50

கூமுட்டத்தனமா கருத்து எழுதுறியே


Palanisamy Sekar
செப் 14, 2024 17:25

மனிதனின் தேவைகளுக்காகத்தான் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். ஆனாலும் எந்த நாட்டில் போர் மேகம் உருவாக ஆரம்பிக்கின்றதோ அங்கே வேளைக்கு செல்வது சரியானது அல்ல. யோசிக்கணும். எப்போதுவேண்டுமானாலும் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக நேரிடும் என்று. சிலருக்கு பணத்தாசை காட்டியும் கூட அழைத்து செல்லப்படுகின்றார்கள் என்பதும் உண்மைதான். ராணுவம் என்றாலே ஓய்வெடுக்க அல்ல எந்நேரமும் உழைத்தே திறனும் என்பதுதான் நிஜம். அதனையெல்லாம் புரிந்துகொள்ளாமல் ஆசைப்பட்டால் இப்படித்தான் அனுபவிக்க நேரிடும். சிந்தியுங்கள் இனியேனும். இப்போது இஸ்ரேல் சென்றால் நல்ல சம்பளம் என்று ஆசைக்காட்டுகின்றார்கள் இந்த போலி ஏஜெண்டுகள். உஷார் உஷார் நமது இம்மிகிரேஷன் இப்படிப்பட்ட நாடுகளுக்கு செல்வோரை அனுமதிக்க கூடாது என்பதுதான் சரியாக இருக்கும்


என்றும் இந்தியன்
செப் 14, 2024 17:19

இந்த உஷார் செய்தி வந்து 3 மாதத்திற்கு முன்பே வந்து விட்டது??துபாய் அபுதாபியில்......இந்த இடங்களில் கூட இதே செய்தி இங்கே டிரைவர் சின்ன வேலை என்று கே கூட்டிக்கொண்டு போய் ஒட்டகம் மேய்க்கும் பணியில் அமர்த்துகின்றார்கள் என்று பல செய்திகள் வந்ததே???ஒரு சின்னவேலை முழு சுதந்திரம் உண்டு சுற்றிப்பார்க்க என்று பெண்களை அழைத்துப்போய் அங்கே வீட்டை துடைக்கும் பாத்திரம் துலக்கும் வேலை மற்றும் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வெளியில் காலடி கூட எடுத்து வைக்கமுடியாத வேலையை கொடுத்து????


naranam
செப் 14, 2024 17:10

ஆனால் இங்கு தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்? மீட்க மட்டும் மோடிஜி வேண்டுமா? அவரைத் தவிர வேறு யாராலும் முடியுமா?


Kundalakesi
செப் 14, 2024 17:03

நம் நண்பன் என மார் தட்டிய ரஷ்யாவின் உண்மை முகம் இதுதான்


சமீபத்திய செய்தி