உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிருக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பு கேட்கிறார் ராகுல்

உயிருக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பு கேட்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சாவர்க்கர் அவமதிப்பு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2023ல் மார்ச் மாதம் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.,யுமான ராகுல் பேசுகையில், சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை விமர்சித்தார். ராகுலின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kzh2duev&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சாவர்க்கரின் உறவினர் சத்யாகி என்பவர் வழக்கு தொடுத்தார். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராகுல் தரப்பு வக்கீல் மிலிந்த் பவார் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பாஜ தலைவர் ஆர்என் பிட்டு என்பவர் ராகுலை பயங்கரவாதி என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல, மற்றொரு பாஜ தலைவர் தர்வீந்தர் மர்வாவும் ராகுலுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார். அவரது பாட்டிக்கு நேர்ந்த கதி, அவருக்கும் நடக்கும் என்று எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைகளால் ராகுலுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ராகுலுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும். இது மாநில அரசின் கடமை, என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தொடர்பான விசாரணை செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

பேசும் தமிழன்
ஆக 14, 2025 13:21

இதுவும் இவர் நடத்தும் நாடகங்களில் ஒன்றாக தான் இருக்கும்..... ஆனாலும் நாட்டு மக்கள் யாரும் இந்த பப்பு வை நம்ப தயாராக இல்லை.....நாட்டு மக்களை ஏமாற்ற பெயருக்கு பின்னால் போலியாக காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார் என்ற உண்மை நாட்டு மக்களுக்கு தெரிந்து விட்டது..... இனியும் உங்கள் ட்ராமா எடுபடாது.


பேசும் தமிழன்
ஆக 14, 2025 13:01

எப்போதும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசும் இவருக்கு எப்படி உயிருக்கு ஆபத்து இருக்க முடியும் ??? இவரது ஆதரவு ஆட்களால் தான் நாட்டு மக்களுக்கு ஆபத்து !!!


M Ramachandran
ஆக 14, 2025 02:19

உங்களுக்கு ரொம்ப பிடித்த பாகிஸ்தான் சீன அல்லது அமெரிக்கா சென்று விடுங்கள். நாங்க நிம்மதியாக இருப்போம். உங்க குடும்பமே பொய் பித்தலாட்ட கும்பல் காரன்ங்க களால் எங்க தலைவலி எங்க நாட்டு பாது காப்பு நிம்மதியாகயிருக்கும்.


Bhakt
ஆக 14, 2025 00:18

அடுத்த நாடகமா பப்புஜி?


மனிதன்
ஆக 13, 2025 22:54

உண்மைதான்... பல உண்மைகளை வெளியில்சொல்லி ஆட்சியையே ஆட்டம்காண வைத்திருக்கிறார்... மற்றவர்களுக்கு ஆத்திரம் வருவது இயல்புதானே...சிம்பிளாக ஒரு மணல் லாரிகூட அவருக்கு நேராக வரலாம்...அப்படி அவர்களை எதிர்த்த எத்தனை எத்தனை பேர் இன்று நம்முடை இல்லை....


vivek
ஆக 14, 2025 08:29

திமுகவின் மணல் லாரியா மனிதா


G Mahalingam
ஆக 13, 2025 22:39

இந்தியாவுக்கு எதிரிகள் தேவை இல்லை . இத்தாலிக்கு ஓடு.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 13, 2025 21:22

பாஸ் அவருக்கு தெரியாம, அவரோட வக்கீலு,தானே கோர்ட்ல போயி இப்படி சொல்லிட்டாரம், வாபஸ் வாங்கிட்டாரு, ஆக ஹிந்து தீவிரவாதி கோட்ஸே னு சொன்ன வாய இவருது இல்லயாம், பீகார் ல மொத்தம் புட்டுக்கும்னு சொன்னதுல அவரே கான் பியூஸ் ஆயிட்டார் பாவம்


theruvasagan
ஆக 13, 2025 20:53

பப்புவுக்கு சத்ரு அவரது வாய்தான். அதை நன்றாக டேப் போட்டு ஒட்டிவிட்டால் உளறாமல் இருப்பார். பாதுகாப்பு பற்றி பயப்படத் தேவையில்லை.


Murugesan
ஆக 13, 2025 20:52

உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் இத்தாலிய அந்நிய கைக்கூலி, பாகிஸ்தானிய, அமெரிக்க அயோக்கியனுங்களின் அடிமையான தாய் நாட்டு துரோகி


Kalyanaraman
ஆக 13, 2025 20:51

இந்தப் பப்பு பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் தான் வேலை செய்கிறார். புதிதாக அமெரிக்காவும் சேர்ந்திருக்கிறது. முக்காவாசி நாள் வெளிநாட்டில் இருக்கிறார். இங்கிலாந்து குடியுரிமை வேறு இருக்கிறது. இந்தியாவை விட இங்கிலாந்து பாதுகாப்பானதாக இருந்தால் அங்கேயே செட்டில் ஆகிவிடலாமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை