வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாட்டு மக்களுக்காக எல்லையில் கடந்து கஷ்டப்படும் ராணுவ வீரர்கள் இந்த காலத்துல எங்க மரியாதை இருக்கு.. சும்மா ஒரு நடிகை படத்தில் சீன போட்டா அவளை எல்லாம் தலைப்புச் செய்தியில் போட்டு செய்தி சேனல்கள் கொண்டாடுது
இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.அருணாச்சல பிரதேசத்தில், சுபன்சிரி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஹவில்தார் நகாத் சிங், நாயக் முகேஷ் குமார் மற்றும் கிரெனேடியர் ஆகிய 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ve6yg8g8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரங்கல்
இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,' 3 ராணுவ வீர்களின் சோகமான மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய ராணுவம் துணை நிற்கும். துணிச்சலான ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்காக எல்லையில் கடந்து கஷ்டப்படும் ராணுவ வீரர்கள் இந்த காலத்துல எங்க மரியாதை இருக்கு.. சும்மா ஒரு நடிகை படத்தில் சீன போட்டா அவளை எல்லாம் தலைப்புச் செய்தியில் போட்டு செய்தி சேனல்கள் கொண்டாடுது