உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரத்துண்டில் தங்க முலாம் பூசி விற்க முயன்ற மூவர் கைது

மரத்துண்டில் தங்க முலாம் பூசி விற்க முயன்ற மூவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : மரத்துண்டுகள் மீது தங்க முலாம் பூசி தங்கக் கட்டிகள் என கூறி விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரபிகுல் இஸ்லாம், இத்திஷ் அலி, அன்வர் உசைன். இவர்கள் பெங்களூரு கோரமங்களாவில் வசித்து வந்தனர்.இவர்கள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டனர். இதன் காரணமாக, செங்கற்கள், மரத்துண்டுகளுக்கு தங்க முலாம் பூசி தங்கக் கட்டி என்று கூறி விற்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.வீடு கட்டும்போது, தங்க புதையல் கிடைத்ததாகவும், அதை பாதி விலைக்கு விற்பனை செய்ய போவதாகவும் கூறி வந்தனர். இதுகுறித்து, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் விசாரணை நடத்தி மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி தங்கக் கட்டிகள், பைக், மூன்று மொபைல் போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
மார் 25, 2025 04:53

நம்மூரு சாம்பிராணி சாத்தியவான்கள் அமைதியா ஒவ்வொருத்தரா வந்து இந்த பிரச்சனைக்கு பைசல் செய்யும் விதமாக கன்னத்தில் இரண்டு சப்பு என்று உங்க ஆட்களை அறைந்துவிட்டு போயிட்டு அவங்களுக்கு பிறகு வக்காலத்து வாங்கலாம் .. உங்க இனத்தில் தான் திருடனுக்கு முட்டு கொடுப்பேங்க. அவ்வளவு ரத்த பாசம் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை